Ajith: அஜித்தின் அண்டர் கவர் காட்ஃபாதர்ஸ்... இந்த 5 பேர் தான் இப்படியொரு சக்சஸ்க்கு காரணம்!
சென்னை: அமரவாதி திரைப்படம் மூலம் அறிமுகமான அஜித், இன்று கோலிவுட்டின் டாப் ஹீரோவாக வலம் வருகிறார்.
சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நடிகரான அஜித்துக்கு, முதல் பலமே அவரது ரசிகர்கள் தான்.
அவர்களைத் தொடர்ந்து அஜித்தின் கேரியரில் அவருக்கு 5 பிரபலங்கள் பக்கபலமாக இருந்துள்ளனர்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அஜித்துடன் நெருங்கிய நட்பில் இருந்த அந்த 5 நபர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி
அஜித் தனது கேரியரில் ஒரே தயாரிப்பாளருடன் அதிக முறை கூட்டணி வைத்துள்ளது நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மட்டுமே. 1997ம் ஆண்டு வெளியான அஜித்தின் ராசி படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தான் தயாரித்திருந்தார். அப்போது தொடங்கிய நட்பு, அடுத்தடுத்து மேலும் 8 படங்களில் இணைய காரணமாக அமைந்தது. ராசி உட்பட வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு என மொத்தம் 9 படங்களை தயாரித்து அஜித்துக்கு நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி கை கொடுத்துள்ளார்.
அதேபோல், இயக்குநர்களில் சரண் தான் அஜித்தின் பேவரைட் என சொல்லப்படுகிறது. சாக்லெட் பாய்யாக இருந்த அஜித்தை ஆக்சன் ஹீரோவாக மாற்றியது சரண் தான். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் என அஜித்தின் 4 படங்களை இயக்கியுள்ளார் சரண். இதில் காதல் மன்னன், அமர்க்களம் படங்கள் இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளன. அஜித்-சரண் இடையேயான நட்பு இருவரது கேரியரையும் வளர்த்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

சரணைத் தொடர்ந்து அஜித்துக்கு கம்பேக் கொடுத்த இன்னொரு முக்கியமான இயக்குநர் எஸ்ஜே சூர்யா. இவர் இயக்கிய வாலி திரைப்படம் தான் அஜித்தை முதல் ஆண்டி ஹீரோவாக ரசிகர்கள் முன் அடையாளப்படுத்தியது. சிவா, தேவா என இரட்டை பாத்திரங்களில் அஜித்தின் அல்டிமேட் ஆக்டிங்கை பார்த்த கோலிவுட், அவரை தலையில் தூக்கி வைத்து ஆடியது. அஜித்துக்காகவே வாலி படத்தின் கதையை உருவாக்கினாராம் எஸ்ஜே சூர்யா.
அஜித்தின் கேரியரில் அதிக கேர் எடுத்துக்கொண்டவர்களில் நடிகர்கள் ரகுவரன், பிரகாஷ்ராஜ் இருவருக்கும் இடம் உண்டு. அஜித்துடன் அமர்க்களம், முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆஞ்சநேயா போன்ற படங்களில் நடித்துள்ள ரகுவரன், அடிக்கடி அஜித்துக்கு டிப்ஸ் கொடுத்துக்கொண்டே இருப்பாராம். அஜித்துக்கு ஒரு கார்டியன் போல வலம் வந்த ரகுவரன், அவரது கேரியர் மீது அதிக அக்கறையுடன் இருந்தாராம்.

அதேபோல், ஆசை, பரமசிவன் படங்களில் அஜித்துடன் நடித்த பிரகாஷ்ராஜும் அவர் மீது ரொம்பவே கேர் எடுத்துள்ளார். இருவரும் இணைந்து அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்றாலும், சினிமாவையும் தாண்டி நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். மேலும், அஜித்துக்கு அடிக்கடி எனர்ஜிட்டிக் பூஸ்டராக அவரது பின்னால் இருந்து உத்வேகம் கொடுத்து வருகிறாராம் பிரகாஷ்ராஜ். இந்த 5 பேரும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அஜித்துக்கு பக்கபலமாக இருந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











