Ajith Lokesh: விரைவில் அஜித்துடன் LCU சம்பவம்... லோகேஷ் கனகராஜ் போட்ட தரமான ஸ்கெட்ச்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது.

விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

லியோவை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ்.

 Ajith Lokesh: Lokesh Kanagaraj hopes to team up with Ajith soon

இந்நிலையில், விரைவில் அஜித்துடன் இணைவேன் என லோகேஷ் நம்பிக்கையுடன் கூறியது வைரலாகி வருகிறது.

விரைவில் அஜித்துடன் இணையும் லோகேஷ்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது. பான் இந்தியா படமான லியோ இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது. மாஸ்டரை தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி லியோவில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மாநகரம் முதல் லியோ வரை லோகேஷ் மொத்தமே 5 படங்கள் தான் இயக்கியுள்ளார். ஆனால், கார்த்தி, விஜய், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், கமல்ஹாசன் என மாஸ் ஹீரோக்களை அவர் இயக்கியுள்ளார். அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியையும் லோகேஷ் இயக்கவிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலிவுட் மட்டும் அல்லாமல் டோலிவுட்டின் பிரபாஸ் உட்பட டாப் ஹீரோக்கள் பலரும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ரெடியாக உள்ளனர்.

இந்நிலையில், கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித்துடன் லோகேஷ் இதுவரை இணையவில்லை. அஜித் - லோகேஷ் காம்போ விரைவில் இணையும் என ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர். இதுபற்றி லோகேஷ் கனகராஜ் தற்போது மனம் திறந்துள்ளார். லியோ ப்ரொமோஷனில் கலந்துகொண்ட அவரிடம், லோகேஷின் யுனிவர்ஸில் அஜித் இணைவாரா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள லோகேஷ், அஜித்துடன் இணைய வேண்டும் என விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 Ajith Lokesh: Lokesh Kanagaraj hopes to team up with Ajith soon

மேலும், அதற்கான சான்ஸ் விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் லோகேஷ் கூறியுள்ளது, அஜித் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் கோவையில் உள்ள டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் லோகேஷ் கனகராஜ் அஜித்துடன் இணைவது குறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

"அஜித்துடன் பணிபுரிய தனக்கு ஆசை உள்ளது. சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக அஜித் சாரை வைத்து படம் இயக்குவேன்" என கூறியிருந்தார். அப்படி வாய்ப்புக் கிடைத்தால் அந்தப் படம் லோகேஷின் LCU கான்செப்ட்டில் இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X