அஜித், மகேஷ் பாபு.. இப்போ யாருன்னு பாருங்க.. சினிமாவில் சூப்பர்ஸ்டார்களுடன் இணைந்து கலக்கும் கயல்!

சென்னை: இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை போட்டதுமே ஹீரோயின் ரோலில் தான் நடிப்பேன் என ஒரு சில இளம் நடிகைகள் அட்ராசிட்டி செய்து வரும் நிலையில், டாப் ஹீரோக்களுடன் சின்னதா ஒரு ரோல் கிடைச்சா கூட கப்பென பிடித்துக் கொண்டு நடித்து வருகிறார் நடிகை சைத்ரா ரெட்டி.

கன்னட டிவி தொடர்களில் நடித்து வந்த சைத்ரா ரெட்டி தமிழில் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் அறிமுகமானார். கயல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் வெளியிடும் இன்ஸ்டா ரீல்கள் எல்லாமே வேற லெவலில் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

அஜித்துடன் வலிமை

அஜித்துடன் வலிமை

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த வலிமை படத்தில் அவரது டீமில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் சைத்ரா ரெட்டி. இவரை பணயம் வைத்துத் தான் வில்லனை பிடிக்க முயல்வார் ஒரு காட்சியில் அஜித். அப்போது தான் அந்த பைக் சேஸிங் காட்சிகள் படத்தில் அனல் தெறிக்கும் அளவுக்கு இடம் பெற்றிருக்கும். ஏகே 61 படத்திலும் சைத்ரா ரெட்டி அஜித் உடன் இணைந்து நடித்து வருவதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகேஷ் பாபுவுடன்

மகேஷ் பாபுவுடன்

வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த நிலையில் அடுத்ததாக மகேஷ் பாபுவுடன் விளம்பரம் ஒன்றில் அவருக்கு ஜோடியாகவே நடித்து அசத்தி விட்டார் சைத்ரா ரெட்டி. மகேஷ் பாபுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சக நடிகைகளை பொறாமையில் ஆழ்த்தி விட்டார். இந்நிலையில், இன்னொரு முன்னணி நடிகருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தீயாக பரவி வருகிறது.

மெகா ஸ்டாருடன்

மெகா ஸ்டாருடன்

இந்நிலையில், தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் சைத்ரா ரெட்டி எடுத்துக் கொண்ட புகைப்படம் டிரெண்டாகி வருகிறது. சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் காட் ஃபாதர் படத்தில் ஏதாவது முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். விரைவில் அது குறித்த பதிவையும் அவரே போடுவார் என எதிர்பார்க்கலாம்.

ரஜினிக்கு முத்தம்

ரஜினிக்கு முத்தம்

அஜித், மகேஷ் பாபு, சிரஞ்சீவிக்கு எல்லாம் முன்னதாக காலா படத்தின் சமயத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வேறலெவலில் டிரெண்டாகின. ரஜினிகாந்தின் கன்னத்தில் அன்புடன் இவர் கொடுத்த முத்த புகைப்படத்தை இன்றும் வெளியிட்டு சிவாஜி படம் 15 ஆண்டுகளை கடந்தது குறித்த பதிவை போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் சைத்ரா ரெட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X