விஷ்ணுவர்தன் படப்பெயர் என்ன?: இன்று அறிவிக்கும் 'தல'
சென்னை: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தின் தலைப்பை இன்று அஜீத் குமார் வெளியிடுவாராம்.
அஜீத் குமார் தனது 42வது பிறந்தநாளை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் விஷ்ணுவர்தன் பட ஷூட்டிங்கில் மனைவி ஷாலினி, மகள் அனௌஷ்கா மற்றும் படக்குழுவினருடன் கொண்டாடினார். அவருக்கு படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.
அஜீத்தின் படத்திற்கு வலை என்று பெயரிடப்பட்டுள்ளதாக பேசப்பட்டது. ஆனால் படத்தலைப்பு வலை இல்லை என்று விஷ்ணுவர்தன் தெரிவித்தார்.

வெளியானது டீசர்
விஷ்ணுவர்தன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதிலும் படத்தின் தலைப்பு இல்லை.

2 பெயர் இருக்கு
அஜீத் படத்திற்கு 2 பெயர்களை தேர்வு செய்து வைத்துள்ளதாக விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

அஜீத்தே அறிவிப்பார்
படத்தின் தலைப்பு அஜீத் குமார் மூலம் இன்று அறிவிக்கப்படும் என்று விஷ்ணுவர்தன் கூறினார்.
Comments


Click it and Unblock the Notifications