விஜய்க்கு செக் மேட் வைக்க பக்கா பிளானா? அரசியல் விளையாட்டில் அஜித் படமா? ஒருவேளை இருக்குமோ?
சென்னை: ரீ ரிலீஸ் தமிழ் சினிமாவில் தற்போது புதிய கலாச்சாரமாகவே மாறிவிட்டது. முன்பெல்லாம் ரீ ரிலீஸ் என்றால், 'நல்ல படம் போட்டு இருக்காங்கப்பா, போய் தியேட்டர்ல பார்க்கலாமே' என்று நினைத்து தியேட்டருக்குச் சென்றவர்கள் உண்டு. அது இப்போதும் உள்ளது. உச்ச நடிகர்களின் புது படங்களுக்கு எப்படி வரவேற்பும் பாக்ஸ் ஆபீஸ் கணக்குகளும் போடப்படுகிறதோ, அதேபோல் ரீ ரிலீஸ் படங்களுக்கும் வசூல் கணக்குகள், ஓபனிங், ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் கணக்கில் கொள்ளப்படுகிறது. இப்படி இருக்கும்போது, இந்த ரீ ரிலீஸ் படங்களில் பாலிடிக்ஸ் எட்டிப் பார்க்கிறதோ என்ற சந்தேகத்தை சமீபத்திய சம்பவம் எழுப்பியுள்ளது.
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது கடைசி படமாக உருவாகி உள்ள ஜன நாயகன் படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான புரோமோசன் வேலைகள் நடைபெற்று வருகிறது. பொதுவாக விழாக் காலங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வருகிறது என்றால், அந்த படங்களுடன் போட்டிக்கு பெரிய நடிகர்கள் படங்கள் தான் வெளியாகும். இதில் வணிக ரீதியாக முந்திச் செல்லும் படம் வெற்றி பெற்ற படமாக பார்க்கப்படும்.
இப்படி இருக்கும்போது ஜன நாயகனுக்கு போட்டியாக வெளியாகவுள்ள படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் பராசக்தி. விஜய் படத்துடன் மோதும் அளவுக்கு சிவகார்த்திகேயன் உச்ச நடிகராக மாறிவிட்டால் என்றால், அது எதிர்காலத்தில் நடக்கலாம். அதே நேரத்தில் சமகாலத்தில் அந்த இடத்தை நோக்கி சிவகார்த்திகேயன் வளர்ந்து கொண்டு இருக்கிறார்.

அப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயன் படம் விஜய் படத்துடன் பொங்கலில் மோதுகிறது என்றால் அதற்கு காரணம் அரசியல் தான் என்று கூறப்படுகிறது. அதாவது பராசக்தி படத்தை தயாரித்துள்ள நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம், திமுகவுக்கு மிகவும் நெருக்கமான தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. இது மட்டும், இல்லாமல், திமுக முன்னாள் தலைவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கதை, திரைக்கதையில் உருவான படம் பராசக்தி படத்தின் டைட்டிலை, சிவகார்த்திகேயன் படத்திற்கு பயன்படுத்தி உள்ளதால், படத்தின் வெற்றி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனது அரசியல் பிரச்சாரங்களில் விஜய் தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால் திமுக விஜய்யை கண்டு கொள்ளாமல், அவர்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அண்மையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள், நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் லட்சகணக்கான திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பராசக்தி - மங்காத்தா: ஏற்கனவே ஜன நாயகன் படத்துடன் பராசக்தி படம் மோதுகிறது. இப்படி இருக்கும்போது, மங்காத்தா படத்தையும் ரீ ரிலீஸ் செய்தால் விஜய்யின் ஜன நாயகன் படம் வணிக வெற்றியை எட்டுவது சிக்கல்தான். ஜன நாயகன் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. பராசக்தி படம் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. ஆனால் படம் ஜனவரி 9ஆம் தேதியே ஜன நாயகன் படத்துடன் ரிலீஸ் ஆகும் என்றும் ஒரு பேச்சு ஓடிக் கொண்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு படத்தின் டிரைலர் ரிலீஸில் தெரிவிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு செக் மேட்: இப்படி இருக்கும்போது, அஜித்தின் மங்காத்தா படத்தை ரீ ரிலீஸ் செய்ய போவதால், இது விஜய்க்கும் விஜயின் ஜன நாயகன் படத்திற்கும் வைக்கும் செக்-மேட்டாக கருதப்படுகிறது. அதாவது பராசக்தி படத்தை ஜன நாயகன் படத்துடன் ரிலீஸ் செய்துவிட்டு, பொங்கலுக்கு அஜித்தின் மங்காத்தா படத்தை ரீ ரிலீஸ் செய்தால் தியேட்டர்களை கையகப்படுத்திக் கொள்ளலாம். இதையெல்லாம் கடந்து, விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் குறிப்பாக எக்ஸ் பக்கத்தில் சும்மா இருக்க மாட்டார்கள்.

தேர்தல்: பல ரசிகர்கள் கண்ணியமாக நடந்து கொண்டாலும் அவர்களுக்கு இணையான பல ரசிகர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டு வருவதைப் பார்க்க முடிகிறது. விஜய் ரசிகர்கள் ஏற்கனவே, ரஜினி, அஜித், சூர்யா ரசிகர்களிடம் வம்பு இழுத்து வைத்துள்ளார்கள். இப்படி இருக்கும்போது, பொங்கல் சமயத்தில் மீண்டும் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் வாக்குவாதம், அவதூறான பேச்சுக்கள் என நடந்து கொண்டால், அது 2026 தேர்தலில் விஜய்க்கு எதிராக மாறுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. இப்படியான நிலையை விஜய் மற்றும் விஜய் ரசிகர்கள் எப்படி எதிர் கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என்று திரைத்துறையில் பேசிக் கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











