ஆக்சன் திரில்லர் கதை ரெடி.. கார்த்திக் நரேன் உடன் இணைய முடிவு.. புது ரூட்டை பிடிக்கும் அஜித்?

நடிகர் அஜித் பெரும்பாலும் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.

சென்னை: நடிகர் அஜித் பெரும்பாலும் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.

நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் எச். வினோத்தான் இயக்குகிறார்.

எச். வினோத் இயக்கும் இந்த படத்தில் அஜித் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார். இந்த நிலையில் அஜித் தனது அடுத்த படத்திற்காக வேகமாக தயாராகி வருகிறார்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் அஜித் நான்கு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் என்று நேற்று தகவல்கள் வந்தது. புஷ்கர் காயத்திரி, மாயா இயக்குனர் அஷ்வின், மகிழ் திருமேனி மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோரிடம் கதை கேட்டு இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது.

கார்த்திக் நரேன் அஜித்

கார்த்திக் நரேன் அஜித்

இதில் அஜித்திற்கு தற்போது கார்த்திக் நரேன் கதை பிடித்துவிட்டதாக செய்திகள் வருகிறது. ஆக்சன் திரில்லர் கதை இது என்று கூறுகிறார்கள். கிரைம் ஜானர் படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

அதே சமயம் இந்த படத்தில் சென்டிமென்ட் தூக்கலாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். இதற்கான திரைக் கதையை முழுமையாக எழுதும் பணியில் தற்போது கார்த்திக் நரேன் ஈடுபட்டு வருகிறார். கார்த்திக் நரேன் எடுத்துள்ள மாபியா படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வருகிறது.

என்ன படம்

என்ன படம்

இவர் இயக்கிய நரகாசுரன் பட தயாரிப்பு பிரச்சனை காரணமாக பாதியில் நின்றது. கவுதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் இடையே இதனால் சண்டை கூட வந்தது. கடைசியில் இந்த படம் முழுமையாக எடுக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. இந்த நிலையில்தான் இவர் அஜித்துடன் இணைய உள்ளதாக தகவல்கள் வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X