twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏரோமாடலிங் குறித்து ஆய்வு செய்ய ஜெர்மனி சென்ற அஜித்: வைரல் புகைப்படங்கள்

    By Siva
    |

    சென்னை: தக்ஷா குழுவின் அடுத்த திட்டத்திற்கு உதவி செய்யும் வகையில் வாரியோ ஹெலிகாப்டர் நிறுவன தலைவர் கிறிஸ்டனை சந்தித்து பேசியுள்ளார் அஜித்.

    ஆஸ்திரேலியாவில் நடந்த Medical Express 2018 UAV Challenge' போட்டியில் கலந்து கொண்ட எம்.ஐ.டி.யின் தக்ஷா குழுவுக்கு அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

    அவர் ஆலோசனைப்படி நடந்த குழு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் 2வது இடத்தை பிடித்தது. இதையடுத்து அடுத்த திட்டத்திற்கு தக்ஷா குழு தயாராகி வருகிறது.

    ஜெர்மனி

    கோவாவில் இருந்து சென்னைக்கு வந்த வேகத்தில் அஜித் ஜெர்மனிக்கு கிளம்பிச் சென்றார். ரசிகர் ஒருவர் அவருடன் சேர்ந்து ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம் வெளியானது. அஜித் எதற்காக ஜெர்மனி சென்றார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது.

    தக்ஷா

    தக்ஷா குழுவின் அடுத்த திட்டத்திற்காக ஏரோமாடலிங் குறித்து ஆராய்ச்சி செய்ய அஜித் ஜெர்மனி சென்றுள்ளார். அங்குள்ள வாரியோ ஹெலிகாப்டர் நிறுவன தலைவர் கிறிஸ்டன் ஜோட்னரை சந்தித்து பேசியுள்ளார் அவர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன.

    கெத்து

    தனக்கு பிடித்த விஷயத்தை செய்வதற்காக மெனக்கெடுபவர் அஜித். அவரின் இந்த குணம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

    டிரெண்ட்

    அஜித் ஜெர்மனியில் இருக்கும் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.

    English summary
    Ajith has met Vario helicopters MD Kristen Zodtner in Germany to discuss about aeromodelling.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X