»   »  திரையுலகினரின் டைம்பாஸ் போராட்ட பந்தல் பக்கமே தலயை காட்டாத தல

திரையுலகினரின் டைம்பாஸ் போராட்ட பந்தல் பக்கமே தலயை காட்டாத தல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையுலகினர் இன்று நடத்திய டைம்பாஸ் போராட்டத்தில் அஜீத் குமார் கலந்து கொள்ளவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் இன்று ஒரு நாள் அடையாள மவுன அறவழிப் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் யாருமே மவுனமாக இல்லை என்பது தான் வருத்தம்.

கமல்

கமல்

விஜய் முதல் ஆளாக போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் அவர் கூட மவுனமாக இல்லாமல் சக நடிகர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.

வரவே இல்லை

வரவே இல்லை

திரையுலகினர் நடத்திய காமெடி டைம்பாஸ் போராட்டத்தில் அஜீத் குமார் கலந்து கொள்ளவில்லை. ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருந்தும் அஜீத் வரவில்லை.

வரலட்சுமி

வரலட்சுமி

காலை 9 மணிக்கு துவங்கிய போராட்டம் ஷார்பாக 1 மணிக்கு முடிந்துவிட்டது. இந்த போராட்டத்தில் தற்போதைய ஹீரோயின்களான தன்ஷிகா, வரலட்சுமி மட்டுமே கலந்து கொண்டனர்.

நயன்தாரா

நயன்தாரா

கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாராவை போராட்ட பந்தல் பக்கம் ஆளையே காணவில்லை. அவர் மட்டும் அல்ல கீர்த்தி சுரேஷ், தமன்னா, காஜல் அகர்வால் என்று முன்னணி நடிகைகள் யாருமே வரவில்லை.

டி.ஆர்.

டி.ஆர்.

சிம்பு, அவரது தந்தை டி.ஆர்., சரத்குமார், ராதிகா, ராதாரவி, சந்தானம், விக்ரம் பிரபு, அதர்வா, கவுதம் கார்த்திக், வடிவேலு என பலர் மிஸ்ஸிங். விஷால் தலைமையை பிடிக்காமல் சிலர் போராட்டத்திற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

English summary
Ajith skipped the protest held by Kollywood celebs in support of TN people over Cauvery and Sterlite copper plant issues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X