'கோ' படத்தை மிஸ் பண்ணிய அஜீத்
சென்னை: ஜீவா நடித்த கோ படம் அஜீத் குமாருக்காக எழுதப்பட்டதாம்.
அஜீத் குமாரும் சரி, விஜய்யும் சரி பல வெற்றிப் படங்களை மிஸ் பண்ணியுள்ளனர். அவர்களுக்கு வந்த வாய்ப்பை சில காரணங்களால் அவர்கள் ஏற்க முடியாமல் போக அதில் வேறு நடிகர்கள் நடித்து சூப்பர் ஹிட்டாகியுள்ளன.
இந்நிலையில் அஜீத் குமார் மிஸ் பண்ணிய படங்களை பார்ப்போம்.

கோ
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா, பியா பாஜ்பாய் நடித்த வெற்றிப் படம் கோ. இந்த படத்தின் கதை அஜீத்தை மனதில் வைத்து எழுதப்பட்டதாம். ஆனால் அஜீத் நடிக்க முடியாமல் போக அது சூர்யா, சிம்பு என்று போய் இறுதியில் ஜீவா நடித்துள்ளார்.

கஜினி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா நடித்த கஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் அஜீத் நழுவவிட்டுள்ளார்.

காக்க காக்க
கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடித்த சூப்பர் ஹிட் படம் காக்க காக்க. இந்த படத்தில் நடிக்க முதலில் அஜீத்தை தான் கௌதம் அணுகினாராம்.

ஜெமினி
சீயான் விக்ரம் நடித்த வெற்றிப் படம் ஜெமினி. அதில் வந்த ஓப் போடு வசனம் அனைவரையும் கவர்ந்தது. இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் நழுவ விட்டுள்ளார் அஜீத்.

நான் கடவுள்
பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த நான் கடவுள் படத்தில் அஜீத் நடித்திருக்க வேண்டியது.


Click it and Unblock the Notifications











