Ajith Mohanlal: இணைகிறதா அஜித்-மோகன்லால் கூட்டணி..? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த க்யூட் போட்டோ!
துபாய்: அஜித்தின் விடாமுயற்சி அப்டேட் விரைவில் வெளியாகும் என லைகா சுபாஸ்கரன் அறிவித்திருந்தார்.
இதனிடையே அஜித் தற்போது துபாய், ஓமன் நாடுகளில் பைக் ட்ரிப் சென்றுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில், துபாய் சென்றிருந்த அஜித், அங்கு மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மோகன்லாலை சந்தித்துள்ளார்.
இதனால், விடாமுயற்சியில் அஜித்துடன் மோகன்லாலும் நடிக்கிறாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அஜித் - மோகன்லால் திடீர் சந்திப்பு: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார். விடாமுயற்சி என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ள இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. அதேநேரம் விரைவில் விடாமுயற்சி அப்டேட் வெளியாகும் என லைகா சுபாஸ்கரன் அறிவித்திருந்தார்.
ஆனால், அஜித் தற்போது துபாய், ஓமன் நாடுகளில் பைக் ட்ரிப் சென்றுள்ளார். அவரது பைக் ட்ரிப் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் ட்ரெண்டாகி வந்தன. அதேபோல், அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில், அஜித், மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மோகன் லால் சந்தித்துக்கொண்ட போட்டோ ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.
அஜித், மோகன்லால் இருவரும் துபாயில் சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர். மேலும், இந்தக் கூட்டணி விடாமுயற்சி படத்தில் இணைகிறதா எனவும் கேட்டு வருகின்றனர். விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்திருந்த மோகன்லால், சமீபத்தில் வெளியான ஜெயிலரில் மாஸ் காட்டியிருந்தார். ரஜினியின் நண்பனாக கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
ரஜினி, மோகன்லால் ஆகியோருடன் சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோல் செய்திருந்தனர். ஜெயிலரில் கேங்ஸ்டர் மேத்யூவாக மிரட்டிய மோகன்லால், விடாமுயற்சி படத்தில் நடித்தால் செம்மையாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், ரஜினி - மோகன்லால், விஜய் - மோகன்லால் காம்போ சக்சஸ் கொடுத்தது போல், அஜித் - மோகன்லால் கூட்டணியும் இணைய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், விடாமுயற்சி படத்தில் அஜித் - மோகன்லால் கூட்டணி இணைவது குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இருவரும் மிகச் சாதாரணமாக தான் சந்தித்துகொண்டதாகக் கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகளுக்காக, இயக்குநர் மகிழ் திருமேனியும் துபாயில் தான் இருக்கிறார். இதனால், அஜித் - மோகன்லால் சந்திப்பு ரசிகர்களுக்கு இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











