அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து!
மும்பை: தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விஷ்ணு வர்தன். இயக்குனர் மனிரத்னம் இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
பின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் உழைப்பை பார்த்து வியந்த இவர் அவரிடம் சில வருடம் பணியாற்றினார். அவரிடம் பணியாற்றும் போது நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். இந்தி திரைப்படங்களில் நடித்தார்.

பின்னர் ஜெமினி ஸ்டுடியோ நிறுவனம் இவர் எடுத்த முதல் படத்தை தயாரித்தது. தெலுங்கு படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்து எடுத்தார் விஷ்ணு வர்தன். இதனை அடுத்து ஆர்யா பிரகாஷ் ராஜை வைத்து அறிந்தும் அறியாமலும் படத்தை இயக்கினார். இது தான் இவர் எழுதிய முதல் ஸ்கிரிப்ட்.
தனது மூன்றாவது படமாக ஆர்யா மற்றும் பரத்தை வைத்து பட்டியல் என்ற படத்தை இயக்கினார். இதன் பின் இவருக்கு அடித்தது லக். அஜித் நடிக்கும் பில்லா படத்தை இவர் இயக்கினார். இது ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக் ஆகும். அஜித்தை அதுவரை யாரும் காட்டாத வகையில் ஸ்டைலாக காட்டினார் விஷ்ணு வர்தன். இப்படம் பெரும் வெற்றி பெற்றது.
இதன் பின் ஆர்யா உடன் மீண்டும் சர்வம் படத்தில் கூட்டணி அமைத்தார். இதன் பின் மீண்டும் அஜித் உடன் இணைந்து ஆரம்பம் படத்தை இயக்கினார். விஷ்ணு வர்தன் ஆர்யாவை வைத்து தான் அதிக படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
தற்போது பாலிவுட் பக்கம் செல்கிறார் விஷ்ணு வர்தன். கேப்டன் விக்ரம் பத்ரா வின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளார்.இதற்கு Shershaah என்று தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் கியாரா அத்வானி நடிக்கிறார். படத்தை தர்மா புரோடக்ஷன் சார்பில் கரன் ஜோஹர் தயாரிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications