அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்... குட் பேட் அக்லி பட டீசர் வெளியாகும் தேதி தெரியுமா?

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பெரும் ஆவலுடன் குட் பேட் அக்லி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். இப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளிவரும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. வித்தியாசமான கெட்டப்புகளில் இருக்கும் அஜித்தின் புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. இந்நிலையில், டீசர் குறித்த செய்தியறிந்து ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

யார் இந்த ஆதிக் ரவிச்சந்திரன்: த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஆதிக் ரவிச்சந்திரன். அடல்ட் காமெடி படமாக வெளியான இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் சாதனை படைத்தது. இளைஞர்களுக்கு பிடித்த படமாகவும் அமைந்தது. தனது முதல் படத்திலேயே சிம்ரனை கேமியோ ரோலில் நடிக்க வைத்து வாலி படத்தின் காட்சிகளை நினைவுகூர்ந்தார். பின்னர், சிம்புவை வைத்து இயக்கிய அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அப்படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கும், சிம்புவிற்கும் பிரச்னை ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.

Ajith Good bad ugly Teaser

பின்னர், விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கியிருந்தார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று வசூலிலும் நல்ல லாபத்தை பெற்றது. எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். விஷாலுக்கும் இது வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் தீவிர ரசிகர்: அஜித்தை வைத்து இயக்க ஒரு வாய்ப்பு கிடைத்திடாத என இயக்குநர்கள் பலரும் ஏங்கி தவிக்கின்றனர். அந்த வகையில் அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கு குட் பேட் அக்லி படத்தின் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அஜித்தை வைத்து படம் இயக்குவதுதான் என் வாழ்நாள் லட்சியம் என சமீபத்திய பேட்டிகளிலும் தெரிவித்திருந்தார். அவர் கூறியதுபோலவே குட் பேட் அக்லி படத்தின் போஸ்டர்களில் அஜித்தை வித்தியாசமான கெட்டப்புகளில் காண்பிருத்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் வியந்து ரசித்து பெரிதளவில் கொண்டாடினர். இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ஏப்ரல் 10ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

Ajith Good bad ugly Teaser

குட் பேட் அக்லி பட டீசர்: மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜித்துடன் அர்ஜூன், த்ரிஷா, சுனில், அர்ஜூன் தாஸ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது. கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Ajith Good bad ugly Teaser

தீயாக வேலை செய்யும் ஜி.வி.பிரகாஷ்: குட் பேட் அக்லி படம் வெளியாக இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில், அஜித் ரசிகர் ஒருவர் ஜி.வி.பிரகாஷிடம் பிரதர் எங்களின் கடைசி நம்பிக்கை குட்பேட் அக்லி தான். அந்த மியூசிக்கை கொஞ்சம் நெருப்பா தெறிக்க விடுங்க என கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த ஜி.வி. தீயா வேலை செஞ்சிட்டு இருக்கேன். நீங்க எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும் பதில் அளித்தார். அவரது பதிலை கேட்டு அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திரையில் தீ பரவும் என ஹார்ட்டின் விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X