தனுஷ் படத்தில் அஜித் பட டைட்டிலை காட்டிய கவுதம்.. எனை நோக்கி பாயும் தோட்டாவில் இத நோட் பண்ணீங்களா!
எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் அஜித் பட டைட்டில் இடம்பெற்றிருக்கிறது.
Recommended Video
சென்னை: எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் அஜித் பட டைட்டில் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. பல்வேறு பிரச்சினைகளால் 3 ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த இப்படம் நேற்று தான் ரிலீசாகியுள்ளது.

இந்த படத்தில் மேஷா ஆகாஷ் திரைப்பட ஹீரோயினாக வருகிறார். படத்தில் அவர் நடிக்கும் படத்தின் பெயர் துப்பறியும் ஆனந்தன். இதற்கும் அஜித்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தை சிவாஜி புரோடக்ஷ்ன்ஸ் தயாரிப்பதாக இருந்தது. அந்த படத்திற்கு கவுதம் மேனன் வைத்த பெயர் தான் துப்பறியும் ஆனந்த்.
ஆனால் அப்படம் எடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக தான் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சரன் இயக்கிய அசல் படத்தில் அஜித் நடித்தார் என்பது குறிபிடத்தக்கது.
துப்பறியும் ஆனந்த் திரைப்படம் கைவிடப்பட்டாலும், அடுத்ததாக அவர்கள் இருவரும் என்னை அறிந்தால் படத்தில் இணைந்தனர். அப்படம் சூப்பர் ஹிட்டானது என்பது அனைவரும் அறிந்ததே.


Click it and Unblock the Notifications











