Ajith: நண்பனை இழந்த சோகத்தில் அஜித்... AK 63 அப்டேட் எதிர்பார்த்த ரசிகர்கள்... இதுதான் அதுவா..?

சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 63வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்நிலையில் இன்று ஏகே 63 அப்டேட் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது.

அஜித்தின் ஏகே 63 அப்டேட்..?

கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித் தற்போது தனது 62வது படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் இந்தப் படம் விடாமுயற்சி என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. அஜர்பைனான் நாட்டில் தொடங்கிய விடாமுயற்சி ஷூட்டிங், அடுத்தது இந்தியாவில் நடக்கும் என சொல்லப்படுகிறது. இதனிடையே அஜித்தின் ஏகே 63 படம் குறித்தும் தகவல்கள் வெளியாகின.

Ajith: Mythri Movie Makers disappointed the fans who were expecting Ajiths AK 63 update

அதன்படி, அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. அஜித்தின் வெறித்தனமான ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், தனது நீண்ட நாள் ஆசையை ஏகே 63 மூலம் நனவாக்கவுள்ளார். அஜித் - ஆதிக் கூட்டணியில் உருவாகவுள்ள ஏகே 63 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாம். தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தற்போது புஷ்பா 2ம் பாகத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று காலை 9.09 மணிக்கு ஒரு சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகும் என குறிப்பிட்டிருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் ஏகே 63 படத்தின் அபிஸியல் அப்டேட் தான் வெளியாகவுள்ளதாக உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் அப்போதே ஏகே 63 அப்டேட்டுக்கு வாய்ப்பில்லை என சொல்லப்பட்டது.

அஜித் தனது நண்பனின் மறைவால் சோகத்தில் இருக்கும் போது ஏகே 63 அப்டேட்டுக்கு வாய்ப்பே இல்லை என தகவல்கள் வெளியாகின. அதாவது சில தினங்களுக்கு முன்னர் சட்லெஜ் நதியில் விபத்துக்குள்ளான வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு, நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. முன்னாள் சென்னை மேயரான சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி அஜித்துக்கு மிக நெருங்கிய நண்பர் ஆவார்.

வெற்றியின் மரணச் செய்தி கேட்டது முதல் கவலையில் இருந்த அஜித், நேற்று தனது மனைவி ஷாலினியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனால் ஏகே 63 அப்டேட் வெளியாக வாய்ப்பில்லை என்றே சொல்லப்பட்டது. அதேபோல் தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்ட அப்டேட் ஏகே 63 படம் பற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 8 வசந்தலு என்ற தெலுங்குப் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது மைத்ரி மூவி மேக்கர்ஸ். மேலும் விடாமுயற்சி ரிலீஸ் தேதி உறுதியான பின்னர் ஏகே 63 அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X