மும்பையில் ஜாலியாக ஹோலி கொண்டாடிய ஆர்யா, நயன்தாரா
மும்பை: ஹோலி பண்டிகை இந்த மாதம் கடைசியில் வர இருக்கும் சூழ்நிலையில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், நயன்தாரா, அஜித் மற்றும் ஆர்யாவுடன் இணைந்து ஹோலி கொண்டாடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
மும்பையில் வைத்து இந்தக் கொண்டாட்ட காட்சியை படமாக்கினார் இயக்குநர் விஷ்ணுவர்த்தன்.
பிரபுதேவாவை விட்டுப் பிரிந்த நிலையில் ஆர்யாவுடன் நெருக்கமாக உள்ளார் நயன்தாரா என்பதால் இந்தக் கொண்டாட்டம் தத்ரூபமாக இருந்ததாம்.

பெயரிடாத படம்...
அஜீத், நயன்தாரா இருவரும் விஷ்ணுவர்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். ஆர்யா, டாப்சியும் இதில் நடிக்கின்றனர். .

ஹோலி... ஹோலி... ஹோலி...
ஹோலி பண்டிகையை கொண்டாடும் காட்சி ஒன்று படத்தில் இடம்பெறுகிறது. அதை மும்பையிலேயே படமாக்க திட்டமிட்டார் இயக்குனர். இதற்காக அங்கு ‘செட்'டும்போடப்பட்டது.

பெட்டி, பெட்டியாய் சாயம்
கலர் பொடி பெட்டி பெட்டியாக கொண்டு வரப்பட்டு, அஜீத்தும், நயன்தாராவும் கலர் பொடியை ஒருவர் மீது ஒருவர் வீசி ஆடினார்களாம். கூடவே, நிறைய துணை நடிகர் நடிகைகளும் கலர் பொடி தூவினார்களாம்.

படக்குழுவினர் கொண்டாட்டம்
படத்துக்காக என்றாலும் கூட நிஜத்தில் ஹோலி கொண்டாடியது போலவே கலர் புல்லாக அது இருந்ததாம்.

அடுத்த மாதமும் ஹோலி?
இந்த பாடலை இம்மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். கிளைமாக்ஸ் காட்சி மட்டும் பாக்கி உள்ளதால், அதை முடித்துவிட்டு அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
அப்போ அடுத்த மாதமும் ரசிகர்களுக்கு ஹோலி தான்- ஜாலிதான்....


Click it and Unblock the Notifications











