Ajith: “விஜயகாந்த் மரணத்திற்கு வராமல் புத்தாண்டில் குத்தாட்டம் போட்ட அஜித்..” இதெல்லாம் நியாயமா..?

துபாய்: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜானில் நடைபெற்று வரும் விடாமுயற்சி ஷூட்டிங் இரண்டு ஷெட்யூல் முடிந்துவிட்டன. தற்போது பிரேக் விடப்பட்டுள்ள நிலையில், துபாயில் இருக்கும் அஜித் புத்தாண்டு தினத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இதனையடுத்து அஜித்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

விஸ்வரூபம் எடுத்த அஜித்தின் குத்தாட்டம்
அஜித்தின் ஏகே 62 திரைப்படம், விடாமுயற்சி என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் விடாமுயற்சி மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

 Ajith: Netizens condemn Ajith for hes not attending Vijayakanth funeral

அக்டோபர் மாதம் தொடங்கிய விடாமுயற்சி ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங்கும் முடிந்ததை அடுத்து தற்போது பிரேக் விடப்பட்டுள்ளது. இதனையடுத்து அஜித் துபாயில் ரெஸ்ட் எடுத்து வருகிறார். துபாயில் தனது குடும்பத்தினருடன் ரவுண்டு அடித்து வருகிறார் அஜித். நியூ இயர், மகள் அனோஸ்கா பிறந்தநாள் என இரண்டையும் அஜித் துபாயில் கொண்டாடிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

அதில், சொகுசு கப்பலில் தனது குடும்பத்தினருடன் ரவுண்ட் அடித்த அஜித், மாடல் அழகியுடன் குத்தாட்டம் போட்டு அசத்தினார். இதனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். கடந்த வாரம் கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் ஒருநாளுக்குப் பின்னரே நல்லடக்கம் செய்யப்பட்டது. ரஜினி, கமல்ஹாசன், விஜய், இளையராஜா என திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஆனால், கோலிவுட்டின் முன்னணி நடிகரான அஜித் துபாயில் இருந்து தொலைபேசி வழியாக விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியோ வேட்டையன் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார். ஆனால், அஜித் ஷூட்டிங் இல்லாமல் பிரேக்கில் இருந்தும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. இதனையே ரசிகர்கள் விமர்சித்து அஜித்துக்கு தங்களது கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் பல மாற்றங்களை செய்து காட்டியவர் விஜயகாந்த். அதேபோல் நடிகர் சங்கத் தலைவராகவும் விஜயகாந்த் செய்தது கொஞ்சம் நஞ்சமல்ல. அப்படியிருக்கும் போது அவருக்காக அஜித் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கலாமே என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சினிமா ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் தான் கலந்துகொள்வது கிடையாது என்றாலும், இதுபோன்ற துக்க நிகழ்வுகளிலும் அஜித் இப்படி பங்கேற்காமல் இருக்கலாமா என விமர்சித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X