வீரம்... அஜீத்தின் அடுத்த படத் தலைப்பு!

By Shankar

சென்னை: அஜீத் நடிக்கும் அடுத்த படத்துக்கு வீரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள புதிய படத்துக்கு ஆரம்பம் என பெயர் வைத்துள்ளனர். இந்தத் தலைப்பை அறிவிக்க கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக் கொண்டனர்.

இந்தப் படத்தை ஏ எம் ரத்னம் தயாரித்துள்ளார்.

சிறுத்தை சிவா

சிறுத்தை சிவா

இந்தப் படத்துக்குப் பிறகு சிறுத்தை பட இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடிக்கிறார் அஜீத். இந்தப் படத்துக்கு விநாயகம் பிரதர்ஸ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டது.

விஜயா புரொடக்ஷன்ஸ்

விஜயா புரொடக்ஷன்ஸ்

பழம்பெரும் நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் இது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் நாகிரெட்டியின் நூற்றாண்டு விழாவையொட்டி தயாரிக்கப்படும் சிறப்புத் திரைப்படம் இது. விஜயா நிறுவனம் சார்பில் பாரதி ரெட்டி தயாரிக்கிறார்.

தமன்னா - விதார்த் - சந்தானம்

தமன்னா - விதார்த் - சந்தானம்

இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. முக்கியமான வேடத்தில் விதார்த் நடிக்கிறார். சந்தானம், அபிநயா, அப்புக்குட்டி, பாலா, மயில்சாமி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.

வீரம்

வீரம்

இந்தப் படத்துக்கு வீரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பம் படத்துக்கு தலைப்பு வைக்க ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக் கொண்டது போலில்லாமல், இந்தப் படத்துக்கு உடனடியாக தலைப்பை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

வீ சென்டிமென்ட்

வீ சென்டிமென்ட்

வ, வி ஆகிய எழுத்துக்களில் ஆரம்பித்த அஜீத் குமாரின் முந்தைய படங்களான வாலி, வில்லன், வரலாறு ஆகிய படங்களை தொடர்ந்து வரும் படம்தான் வீரம். இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் 'வி' என்ற எழுத்தில் துவங்குவது நல்ல துவக்கமே, என்று தயாரிப்பாளர்களே கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X