Ak Moto Ride - ஏகே மோட்டோ ரைடு.. அஜித் ஆர்டர் செய்திருக்கும் பைக்குகள்.. வாயை பிளக்க வைக்கும் விலை

சென்னை: AK Moto Ride (ஏகே மோட்டோ ரைடு) அஜித் வெளிநாடுகளில் சில பைக்குகளை ஆர்டர் செய்திருப்பதாகவும் ஒவ்வொன்றின் விலையும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அஜித். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் கூறிய கதையின் இரண்டாம் பாதி தயாரிப்பு நிறுவனத்துக்கு பிடிக்காமல் அதனை மாற்ற சொல்ல விக்னேஷ் சிவன் படத்திலிருந்து வெளியேறினார்.

 Ajith ordered 10 Super bikes from foreign for AK Moto Ride

மகிழ் திருமேனியின் விடாமுயற்சி: இதனையடுத்து அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சியை இயக்க மகிழ் திருமேனி கமிட்டானார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் புனேயில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. த்ரிஷா கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் என கருதப்படுகிறது. படத்தில் வேறு யாரெல்லாம் பணியாற்றுகிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

அஜித்தின் சுற்றுப்பயணம்: இதற்கிடையே விடாமுயற்சி படத்தின் கதை இறுதி வடிவம் பெறுவதற்கு கால தாமதம் ஆனதால் பைக்கில் உலக சுற்றுப்பயணத்தை தொடங்கினார் அஜித். தனது முதல்கட்ட பயணத்தை நேபாளம், பூடான், திபெத் உள்ளிட்ட பகுதிகளில் அவர் மேற்கொண்டார். அண்மையில் தனது பயணத்தை முடித்து சென்னை திரும்பினார். அதனையடுத்து வரும் நவம்பர் மாதத்திலிருந்து இரண்டாம் கட்ட பயணத்தை ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்தின் புதிய தொழில்: இந்நிலையில் அஜித் ஏகே மோட்டோ ரைடு என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் பைக் ரைடு பிரியர்கள் அஜித்தின் நிறுவனத்தில் வாடகைக்கு பைக்குகளை எடுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் சென்று வரலாம். இந்நிலையில் தனது நிறுவனத்துக்காக அஜித் வெளிநாடுகளில் இருந்து பத்து பைக்குகளை ஆர்டர் செய்திருக்கிறாராம்.

விலை இவ்வளவா?: அஜித் ஆர்டர் செய்திருக்கும் ஒவ்வொரு பைக்கின் விலையும் சராசரியாக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதனைக் கேட்ட பலரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்திருக்கின்றனர். அதேபோல் அந்த பைக்குகளுக்கு வாடகையாக 8 லட்சம் ரூபாய் வரை அஜித் வசூலிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் தனது சக ரைடருக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கை அஜித் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

நோக்கம் என்ன?: முன்னதாக ஏகே மோட்டோ ரைடு குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், " ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride)" என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும்" என தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X