அஜீத்துக்கு 'ஸ்டார்ட் ஆக்ஷன்' சொல்ல பயத்தில் நடுநடுங்கிய 'வீரம்' சிவா

By Siva

சென்னை: வீரம் படத்திற்காக அஜீத் நடித்த ஒரு காட்சியை படமாக்குவதற்குள் இயக்குனர் சிவா பயத்தில் நடுங்கிவிட்டாராம்.

சண்டை காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிக்க விரும்பும் நடிகர்களில் ஒருவர் அஜீத் குமார். அவர் ஆரம்பம் படத்தில் சண்டை காட்சி ஒன்றில் நடித்தபோது காலில் காயம் ஏற்பட்டது.

அதற்காக அவர் அடுத்த மாதம் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவிருக்கிறார். இந்நிலையில் வீரம் படத்திற்காகவும் அவர் ரிஸ்க் எடுத்துள்ளார்.

ரயில்

ரயில்

ஒரு சண்டை காட்சியில் அஜீத் ரயில் மீது நின்று கொண்டு நடித்துள்ளார். இந்த காட்சியை எடுத்து முடிப்பதற்குள் இயக்குனர் சிவா பயத்தில் வெடவெடத்துப் போய்விட்டாராம்.

ஸ்டண்ட் மாஸ்டர்கள்

ஸ்டண்ட் மாஸ்டர்கள்

அஜீத் நடித்த சண்டை காட்சியை பாதுகாப்புக்கு முன்னேற்பாடு செய்ய முடியாத இடத்தில் எடுத்தோம். ஸ்டண்ட் மாஸ்டர்கள் கூட அவரை போன்று ரிஸ்க் எடுக்க மாட்டார்கள் என்றார் சிவா.

கரணம் தப்பினால் மரணம்

கரணம் தப்பினால் மரணம்

அஜீத் அந்த சண்டை காட்சியில் கரணம் தப்பினால் மரணம் என்ற ஆபத்தில் தான் நடித்தார். தனக்காக இந்த காட்சியை லேசாக்கி எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று நான் அவரிடம் கதை கூறியபோதே வலியுறுத்தினார் என்று சிவா தெரிவித்தார்.

ஸ்டார்ட் ஆக்ஷன்

ஸ்டார்ட் ஆக்ஷன்

அந்த காட்சியை படமாக்கும்போது ஸ்டார்ட் ஆக்ஷன் சொல்லும்போது நான் நடுநடுங்கிவிட்டேன். ஆனால் பயந்து பயந்து எடுத்த அந்த காட்சி அருமையாக வந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சிவா கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X