அப்பாவை இழந்த சோகத்தில் அஜித்.. ஏகே 62 படப்பிடிப்பை எப்போ ஆரம்பிக்க உள்ளார் தெரியுமா?

சென்னை: இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு படம் வெளியானது.

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு படங்களுமே ஜனவரி 11ம் தேதி போட்டிப் போட்டு ஒரே நாளில் வெளியாகின.

இந்நிலையில், அடுத்ததாக லியோ படத்தை ஆரம்பித்து நடிகர் விஜய் அந்த படத்தின் ஷூட்டிங்கை முடிக்க உள்ள நிலையில், நடிகர் அஜித் இன்னமும் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கையே ஆரம்பிக்கவில்லை.

விக்னேஷ் சிவன் மாற்றம்

விக்னேஷ் சிவன் மாற்றம்

லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ள 62வது படம் உருவாக உள்ள நிலையில், அந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டே ஒரு வருடம் ஆகிறது. ஆனால், கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் செய்த காலதாமதம் மற்றும் கதையில் ஏற்பட்ட சொதப்பல்கள் காரணமாக நடிகர் அஜித் இந்த படத்திற்கு விக்னேஷ் சிவன் வேண்டாம் என அதிரடியாக கூறியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. அஜித்தின் இந்த முடிவால் இயக்குநர் விக்னேஷ் சிவன் ரொம்பவே அப்செட் ஆனதையும் சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி இருந்தார்.

மகிழ் திருமேனி தான்

மகிழ் திருமேனி தான்

விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்ததாக இயக்குநர் அட்லீ, விஷ்ணுவர்தன் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கடைசியில் இயக்குநர் மகிழ் திருமேனி சொன்ன கதை நடிகர் அஜித்துக்கு பிடித்துப் போக அந்த கதையின் ஃபுல் பவுண்டன் ஸ்க்ரிப்ட்டை ரெடி பண்ணுங்க என அஜித் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரல

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரல

ஆனால், இதுவரை அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி தான் இயக்கப் போகிறார் என்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் லைகா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், சமீபத்தில் நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் மறைந்த நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி இறுதிச்சடங்கில் கலந்து கொண்டது ரசிகர்கள் கவனத்தை கவர்ந்தது.

அப்பாவை இழந்த சோகம்

அப்பாவை இழந்த சோகம்

உலகம் முழுவதும் பைக் டூர் செல்லும் தனது ஆசை மற்றும் ஏகே 62 படத்தை ஆரம்பிப்பது என அனைத்தையும் தற்போது தள்ளி வைத்து விட்டு அப்பாவை இழந்த சோகத்தில் நடிகர் அஜித் உள்ளார் என்றும் மார்ச் மாதம் மட்டுமின்றி ஏப்ரல் மாதத்திலும் நடிகர் அஜித் ஏகே 62 படத்தை ஆரம்பிக்க வேண்டாம் என தள்ளிப் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் பிறந்தநாளில் அறிவிப்பு

அஜித் பிறந்தநாளில் அறிவிப்பு

லைகா நிறுவனமும் அஜித்தை எந்தவொரு தொந்தரவும் செய்யாமல் இயக்குநர் மகிழ் திருமேனிக்கு மேலும் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகளை செய்ய நேரம் ஒதுக்கி தந்திருப்பதாக கூறுகின்றனர். நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி ஏகே 62 படப்பிடிப்பின் பூஜையை நடத்தி படப்பிடிப்பை ஆரம்பித்து விடலாம் என்கிற முடிவில் லைகாவும் நடிகர் அஜித்தும் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

எல்லாம் ரெடி

எல்லாம் ரெடி

இயக்குநர் மகிழ் திருமேனிக்கு கிடைத்த ஸ்பேஸை பயன்படுத்திக் கொண்டு பக்காவான ஆக்‌ஷன் அதிரடி ஸ்க்ரிப்ட்டை முழுவதுமாக ரெடி செய்து விட்டாராம். நடிகர் அஜித் எப்போ க்ரீன் சிக்னல் கொடுத்தாலும், அடுத்த நொடியே படப்பிடிப்பை ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மகிழ் திருமேனி செய்து தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X