“வலிமை“யில் அஜித்துக்கு இரட்டை வேடமா... தீம் படங்கள் சொல்லும் புதுகதை!
சென்னை : வலிமை படத்தின் தீம் மியூசிக்கை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், தீம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த புகைப்படத்தில் இரண்டுவிதமான தோற்றத்தில் அஜீத் தோன்றுவதால், வலிமை திரைப்படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அஜித்தின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி ட்ராண்டாக்கி வருகின்றனர்.

வலிமை
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வைரலாகும்
இப்படம் பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் வெளியாக ஒருமாதமே எஞ்சி உள்ளதால், வலிமை திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் அவ்வப்போது படக்குழு வெளியிட்டு வருகிறது. இப்படத்தில் மேக்கிங் வீடியோ, பாடல்கள் மற்றும் Glimpse என அனைத்தும் வெளியாகின வேறலெவலில் வைரலாகின.

தீம் மியூசிக்
இந்நிலையில் , வலிமை திரைப்படத்தின் தீம் மியூசிக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. விசில் ஒலியின் மூலம் இந்த தீம் மியூசிக்கை யுவன் சங்கர் ராஜா உருவாக்கி உள்ளார். இந்த தீம் மியூசிக் வைரலாகி வரும் நிலையில் தீம் புகைப்படங்களை அஜித்தின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இரு வேடமா
அதில், அஜித், இரண்டு விதமான கெட்டப்பில் தோன்றி உள்ளார். ஒரு கெட்டப்பில் சற்றே மொட்டை தல நரைத்த முடியுடனும், மற்றொரு கெட்டப்பில் நரைக்காத முடியுடனும் தோன்றுவதால், இந்த படத்தில் நடிகர் அஜித் இரு வேடத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

இரட்டை வேடபடங்கள்
வாலி,வில்லன், சிட்டிசன், வரலாறு, பில்லா, அட்டகாசம் போன்ற திரைப்படங்களில் அஜீத் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அஜீத்இரட்டை வேடத்தில் நடித்த அனைத்து படங்களில் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளின என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











