ரெண்டு கெட்டப்புமே சூப்பரூ.. ஆனா இதுல எது அதுக்கு.. ஒருவேளை டபுள் ட்ரீட்டோ.. தல ரசிகர்கள் குழப்பம்!

வலிமை படத்தில் அஜித் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Recommended Video

இரட்டை வேடத்தில் கலக்கும் தல அஜித் | Filmibeat tamil

சென்னை: வலிமை படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித், ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால் கதாபாத்திரத்திற்காக அஜித் தயாராகி வருவதால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. அடுத்த மாதம் தான் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

அஜித் புகைப்படங்கள்

அஜித் புகைப்படங்கள்

இதற்கிடையே அஜித் சமீபகாலத்தில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் அஜித் போலீசாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு முன்பு வெளியான புகைப்படங்கள் மூலம் அஜித் மீண்டும் கருப்பு நிற முடியுடன், இளமையான தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர்

மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதில் மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் இருக்கிறார். ஏறக்குறைய மொட்டைத் தலை போன்ற தோற்றத்தில் இருக்கிறது அவரது ஹேர்ஸ்டைல்.

போலீஸ் தோற்றம்

போலீஸ் தோற்றம்

கூடவே மீசை வித்தியாசமாக கீழே நீண்ட வாக்கில் உள்ளது. ஏறக்குறைய வேதாளம் படத்தில் வருவது போன்ற தோற்றத்தில் இருக்கிறார். ஆனால் உடற்பயிற்சிகள் மூலம் உடம்பை மேலும் மெருக்கேற்றி இருப்பதோல் போலீஸ் போன்ற கம்பீரம் அதில் தெரிகிறது.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

இந்த இருவேறு விதமான அஜித்தின் கெட்டப்புகளால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இரண்டு கெட்டப்புகளுமே மாஸாக இருந்தாலும், இரண்டுமே போலீஸ் போன்ற தோற்றத்திலேயே இருக்கிறது. எனவே வலிமை படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா அல்லது இரண்டு தோற்றத்தில் நடிக்கிறாரா என்ற குழப்பம் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

போலீஸ் - ரௌடி

ஒருவேளை ஒரு அஜித் போலீசாகவும், மற்றொரு அஜித் வில்லனாகவும் நடிக்கலாம் என ரசிகர்கள் யூகம் தெரிவித்து வருகின்றனர். அதோடு, வலிமை படத்தின் கதை பற்றி அப்டேட் கேட்டும் வினோத்தை அவர்கள் நச்சரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X