ஒயிட் ஜெர்சில பவுலிங் போடுறது யாரு தெரியுதா? அட நம்ம தல…!
அஜித் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது
சென்னை: நடிகர் அஜித் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தற்போது நடித்துவரும் திரைப்படம் விஸ்வாசம். அஜித், சிவா இருவருமே சாய்பாபா பக்தர்கள் என்பதாலும், வியாழக்கிழமை சென்டிமெந்டாலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வீதி வீதியாக பைக் ரேலி நடத்தியெல்லாம் அஜித்தின் தீவிர ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில், அஜித் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. கார் ரேஸ், பைக் ரேஸ் என விளையாட்டுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அஜித் என்பது தெரிந்த விஷயம் தான்.
அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் அவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 16 நொடிகளே ஓடும் அந்த வீடியோவில் வெள்ளை நிற ஜெர்சியுடன் ஓடிவந்து அஜித் பவுலிங் போடுகிறார்.
வீரம், வேதாளம் திரைப்படங்களின் படப்பிடிப்பின்போதும் அஜித் கிரிக்கெட் விளையாடினாராம்.


Click it and Unblock the Notifications











