Ajith: அஜித்தை திடீரென சந்தித்த சிம்பு பட தயாரிப்பாளர்... ரசிகர்களுக்கு அடுத்த அப்டேட் ரெடி!

சென்னை: துணிவு படத்தைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் நடிக்கவுள்ளார் அஜித்.

அதன்படி, அவரது 62வது படமாக உருவாகவுள்ள விடாமுயற்சி இயக்குநராக மகிழ் திருமேனி கமிட்டாகியுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் அஜித்தை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தை சந்தித்த ஐசரி கணேஷ்:கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். அஜித்தின் 62வது படமாக உருவாகும் இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த ஏகே 62, பின்னர் இயக்குநர் மகிழ் திருமேனியின் கையில் சென்றது. இதனால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி தொடங்க முடியாமல் லைகா நிறுவனம் தடுமாறி வருகிறது.

 Ajith: Producer Ishari K. Ganesh met actor Ajith Kumar suddenly

இந்தப் படத்தை மார்ச் மாதம் தொடங்கி விஜய்யின் லியோவுடன் போட்டியாக களமிறக்க முடிவு செய்திருந்தார் அஜித். ஏற்கனவே இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டுமே ஒரேநாளில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது. அதனால், தளபதி 68 VS ஏகே 62 போட்டியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாகிப் போனது. இந்நிலையில் அஜித்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திடீரென சந்தித்துள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்கள் தயாரித்து வருகிறார் ஐசரி கணேஷ். கோமாளி, எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை தயாரித்துள்ள ஐசரி கணேஷ், கடைசியாக சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தையும் ப்ரொடியூஸ் செய்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் தனது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தை ஷேர் மார்க்கெட்டிலும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனால், இன்வெஸ்டர்களின் ஷேருடன் அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களை தயாரிக்கவுள்ளார்.

ஏற்கனவே ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் ஒரு பிரம்மாண்டமான படம், ஜீவா, அர்ஜுன் இணைந்து நடிக்கும் படம் ஆகியவற்றை தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது திடீரென அஜித்தை ஐசரி கணேஷ் சந்தித்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அஜித்தின் படத்தையும் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளாரா என கேள்வி எழுந்துள்ளது. விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு பைக் டூர் செல்ல திட்டமிட்டுள்ளார் அஜித்.

அதனால், அவர் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ்க்கு கால்ஷீட் கொடுத்திருப்பாரா எனத் தெரியவில்லை. இருப்பினும் வேல்ஸ் பிலிம்ஸ் பேனரில் அஜித் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவே சொல்லப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அஜித் - ஐசரி கணேஷ் இணையும் படம் குறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அஜித்தும் ஐசரி கணேஷும் சந்தித்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X