பாக்ஸ் ஆபீஸ் 'ஓபனிங் கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த 'வீரம்' அஜீத்

By Siva

சென்னை: அஜீத்தின் வீரம் படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளது.

அஜீத் குமார் பாசக்கார அண்ணனாக நடித்த வீரம் படம் உலகம் முழுவதும் சுமார் 800 தியேட்டர்களில் கடந்த 10ம் தேதி ரிலீஸானது. படம் செம மாஸ், இயக்குனர் சிவா அஜீத்துக்கு ஏற்ற கதையை தயார் செய்து இயக்கியுள்ளார் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

வீரம் விமர்சகர்களின் பாராட்டை மட்டும் அல்ல தியேட்டர்களில் வசூலிலும் சக்கை போடு போடுகிறது.

ஓபனிங் கிங்

ஓபனிங் கிங்

அஜீத் குமாரின் வீரம் ரிலீஸான முதல் நாள் தமிழகத்தில் மட்டும் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபீஸ் ஓபனிங் கிங் என்பதை அஜீத் மீண்டும் நிரூபித்துள்ளார்.

வெளிநாடுகள்

வெளிநாடுகள்

வீரம் தமிழகம், கர்நாடகா தவிர அமெரிக்கா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் சுமார் 50 தியேட்டர்களில் வீரம் ரிலீஸானது. ஆனால் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து பெங்களூரில் உள்ள மல்டிபிளக்ஸ்கள் வீரம் படத்திற்கான ஸ்கிரீன்களை அதிகரித்துள்ளன. வேலை நாளான வெள்ளிக்கிழமை அன்று படம் ரிலீஸான போதிலும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

வீரம் படம் அஜீத் ரசிகர்களை தவிர்த்து பிற ரசிகர்களையும் கவர்ந்துவிட்டது. படத்தில் அஜீத் ரயிலில் சண்டை போடும் காட்சி பல தரப்பு ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றுள்ளது.

அதிக அரங்குகள்

அதிக அரங்குகள்

வீரம் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் கேரளாவில் கூடுதல் தியேட்டர்களில் வீரம் வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கல்

பொங்கல்

இந்த பொங்கல் தல ரசிகர்களுக்கு வீரம் பொங்கலாக அமைந்துள்ளது. வீரம் குடும்பத்துடன் கண்டுகளிக்க வேண்டிய ஒரு நல்ல படமாக அமைந்துள்ளது என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X