Ajith: “அந்த தம்பி ஆடட்டும்..” அமர்க்களம் படத்தில் அஜித் செய்த சம்பவம்... ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி!

சென்னை: ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சைன் டாம் சாக்கோ ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் ராகவா லாரன்ஸ் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், அமர்க்களம் படத்தின் ஷூட்டிங் போது அஜித்துடன் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார்.

Ajith: “அந்த தம்பி ஆடட்டும்..” அமர்க்களம் படத்தில் அஜித் செய்த சம்பவம்... ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி!

அஜித் குறித்து நெகிழ்ந்த ராகவா லாரன்ஸ்
பிரபுதேவா, ராஜூ சுந்தரம் ஆகியோரின் குழுவில் குரூப் டான்ஸராக ஆடிக்கொண்டிருந்த ராகவா லாரன்ஸ், பின்னர் டான்ஸ் மாஸ்டராக வலம் வரத் தொடங்கினார். பின்னர் தான் கோரியோகிராபி செய்த பாடல்களில் டான்ஸ் ஆடிய ராகவா லாரன்ஸ், பின்னர் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து ஹீரோவாகவும் ப்ரொமோஷன் எடுத்தார்.

அப்படியே இயக்குநர், தயாரிப்பாளர் என கெத்து காட்டி வரும் ராகவா லாரன்ஸ், தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் SJ சூர்யா, ஷைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு வரும் 10ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டார்.

அப்போது ஜிகர்தண்டா படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அவர், முதன்முறையாக பாடலுக்கு டான்ஸ் ஆடியது பற்றியும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அஜித்தின் அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற 'மகா கணபதி’ பாடல் தான், ராகவா லாரன்ஸை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியது. பரத்வாஜ் இசையில் செம்ம ரகளையான குத்து பாடலாக உருவான இதில், ராகவா லாரன்ஸின் டான்ஸ் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்தப் பாடலில் தான் டான்ஸ் ஆடியதற்கு அஜித் தான் காரணம் என ராகவா லாரன்ஸ் மனம் திறந்துள்ளார். அதாவது, அமர்க்களம் ஷூட்டிங்கின் போது நான் அஜித் சாருடன் எனக்கு அதிகம் பழக்கம் இல்லை. அந்தப் பாடலில் முதலில் அஜித் சார் தான் ஆடுவதாக இருந்தது. ஆனால், கோரியோகிராபி செய்யும் போது எனது டான்ஸ் நன்றாக இருந்ததால், அந்த தம்பியே ஆடட்டும்... நல்லா ஆடுறாரு என எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்.

இதனால் தான் மகா கணபதி பாடல் மூலம் நான் அறிமுகமானேன். அப்போது முதல் அஜித் சார் மீது எனக்கு மரியாதை வந்தது. அவருக்கு எப்போதுமே எனது நெஞ்சில் தனி இடம் உண்டு என ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார். ராகவா லாரன்ஸின் இந்த பேச்சை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X