Ajith: ‘அது ஒரு கனாக்காலம்’ அம்மா, அப்பாவுக்கு ட்ரீட் கொடுத்த அஜித்... எவ்ளோ க்யூட்டான வீடியோ!

சென்னை: நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியன் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் காலமானார்.

உயிரிழந்த சுப்ரமணியன் கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்ததாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், அஜித் தனது அம்மா, அப்பா ஆகியோருடன் ஹோட்டலில் சாப்பிடும் அரிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் அஜித்தின் ஃபேவரைட்டான இயக்குநர் ஒருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

 Ajith: Rare Video of Ajith with his Parents and Director Siva at Hotel

அம்மா, அப்பாவுக்கு ட்ரீட் கொடுத்த அஜித்: அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான துணிவு, ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக சொல்லப்படும் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அஜித்தின் தந்தை சுப்ரமணியன் கடந்த மாதம் 24ம் தேதி அதிகாலை காலமானார். பக்கவாத பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சுப்ரமணியன், கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்ததாக சொல்லப்பட்டது. இதனையடுத்து நடிகர்கள் விஜய், சூர்யா, கார்த்தி, பார்த்திபன் ஆகியோர் அஜித் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். கமல், சிம்பு உள்ளிட்ட மேலும் சிலர் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர்.

உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்த தந்தையை, அஜித் மிக நல்லபடியாக பார்த்துக்கொண்டார் என, அவரது வீட்டில் வேலை பார்த்தவர்கள் கூறியிருந்தனர். அப்பா, அம்மா மீது அதிக பாசம் கொண்ட அஜித், எப்போதும் அவர்களை மிக அக்கறையுடன் பார்த்துக்கொள்வாராம். அதுமட்டும் இல்லாமல் அவர்களுக்காக அதிக நேரம் செலவழிப்பதோடு, அடிக்கடி வெளியேவும் கூட்டிச் சென்றுள்ளார்.

 Ajith: Rare Video of Ajith with his Parents and Director Siva at Hotel

அப்படியொரு நாள் அஜித் தனது அம்மா, அப்பா உட்பட மொத்த குடும்பத்தினரையும் ஹோட்டல் கூட்டிச் சென்று ட்ரீட் வைத்துள்ளார். அம்மாவையும் அப்பாவையும் தனது பக்கத்திலேயே அமர வைத்து அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்து, அவரே பரிமாறவும் செய்துள்ளார். மகனின் அன்புக் கட்டளையை மறுக்காமல், அவர்களும் அஜித் பரிமாறும் உணவை சாப்பிட்டு ரசிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.

முக்கியமாக இந்த வீடியோவில் அஜித்தின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவரான சிறுத்தை சிவாவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அஜித்துக்கு அருகில் அவரது அம்மா, அப்பாவும் எதிர் இருக்கையில் சிறுத்தை சிவாவும் அமர்ந்துள்ளார். அஜித் - சிவா கூட்டணியில் தொடர்ச்சியாக 4 திரைப்படங்கள் வெளியாகின. அதனால், இந்த வீடியோவும் அப்போது எடுக்கப்பட்டதாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

முன்னதாக தனது தந்தை உயிரிழந்த உடனே அஜித் ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதில், தங்களது தந்தை உயிரிழந்தது குடும்ப நிகழ்வாகவே இருக்க நினைப்பதாக கூறியிருந்தார்.. மேலும், அஞ்சலி செலுத்துவதற்காக ரசிகர்கள் நேரில் வர வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இதனை புரிந்துகொண்ட அவரது ரசிகர்கள் அஜித்தின் வீட்டிற்கும் அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்துக்கும் செல்லாமல் அமைதிக்காத்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X