சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு திடீரென வந்த அஜித்.. செல்பி எடுக்க குவிந்த ஃபேன்ஸ்.. வைரல் வீடியோ!
சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு திடீரென வந்த அஜித்.. செல்பி எடுக்க குவிந்த ஃபேன்ஸ்.. வைரல் வீடியோ!
Recommended Video
சென்னை: நடிகர் அஜித் ஷார்ட்ஸ் டி ஷர்ட்டில் ரசிகர்களுடன் செல்பி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அஜித். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 60வது படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

வலிமை படம்
அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

முதல்வர் முதல் பிரதமர் வரை
இந்நிலையில் படத்தின் டைட்டிலை தவிர வேறு எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். படக்குழு சரியான நேரத்தில் அறிவிப்பு வரும் என்று தெரிவித்திருந்தாலும் முதல்வர் முதல் பிரதமர் வரை வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர்.

வருத்தமுற செய்கிறது
இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட அஜித், கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நடித்திருக்கும் 'வலிமை' சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது.

சினிமா எனக்கு தொழில்
முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில்.

கண்ணியத்தை கடைப்பிடியுங்கள்
நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில், மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீதுள்ள மரியாதையை கூட்டும். இதனை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூகவலைதளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை கமிஷனர் அலுவலகம்
என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன் என்று கூறினார். அதனைக் கேட்ட ரசிகர்கள் தல அஜித்தின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் அஜித், வேப்பேரியில் உள்ள கமிஷன் அலுவலகத்திற்கு அஜித் வருகை தந்துள்ளார்.

தவறகாக நினைத்து
அஜித் துப்பாக்கி சூடு பயிற்சி எடுக்கும் நிகழ்விடமான ரைஃபிள் கிளப் இங்கு உள்ளதாக நினைத்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ரைஃபில் கிளப் அமைந்துள்ள பழைய கமிஷனர் அலுவலகம் நோக்கி அஜித் புறப்பட்டார்.

வைரலாகும் வீடியோ
அதற்குள் அவரை அடையாளம் கண்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்து செல்பி எடுக்க கேட்டனர். இதனை தொடர்ந்து அவர்களுடன் சில நிமிடங்கள் மாஸ்க் அணிந்து பேசிய அஜித், அவர்களுடன் போட்டோக்களை எடுத்து கொண்டார். இந்த போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











