Ajith - தலனு கூப்ட வேண்டாம்னு சொன்ன அஜித்.. கூப்பிட்ட ரசிகர்கள்.. ஏகே ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

சென்னை: துபாயில் அஜித்தை ரசிகர்கள் தல தல என்று கூப்பிட்ட சூழலில் அவரது ரியாக்‌ஷன் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. முன்னதாக அவர் தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களிடம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் கிடைத்த ஓய்வை அடுத்து தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டுவருகிறார்.

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. அந்தப் படத்துக்கு போட்டியாக வாரிசு படம் களமிறங்கினாலும் துணிவு படமே வென்றது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தை மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் மீது ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

Ajith Reaction To Fans in Dubai Goes Viral on Social Media

நோ அப்டேட்: விடாமுயற்சி அஜித்தின் 62ஆவது படமாக உருவாகிவருகிறது. முதலில் ஏகே 62வை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற மகிழ் திருமேனி உள்ளே வந்தார். அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி படத்துக்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள். அதற்கு பிறகு படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட விரக்திக்கே சென்றனர்.

தொடங்கிய ஷூட்டிங்: அதிகாரப்பூர்வமாக எந்த அப்டேட்டும் வரவில்லை என்றாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கியது. இதில் அஜித்துடன் திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதலில் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்தார். ஆனால் அவர் படத்திலிருந்து தூக்கப்பட்டு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக கமிட் ஆக்கப்பட்டார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த ஆரம்பம் படத்துக்கு கேமரா மேனாக இருந்திருக்கிறார். இருந்தாலும் பில்லா போன்ற படங்களில் அஜித்தை படு ஸ்டைலிஷாக காட்டிய நீரவ் ஷா தூக்கப்பட்டது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமே.

அஜித் Vs மகிழ் திருமேனி: சூழல் இப்படி இருக்க அஜித்துக்கும், மகிழ் திருமேனிக்கும் ஷூட்டிங்கில் முட்டிக்கொண்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதாவது நீரவ் ஷா தூக்கப்பட்டதிலிருந்து ஆரம்பித்த உரசல்; தற்போது மனஸ்தாபத்தில் வந்து நிற்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி மகிழ் திருமேனி ரொம்பவே மெதுவாக படத்தை எடுப்பதாகவும் அஜித்தின் கால்ஷீட் பிப்ரவரிவரை மட்டும்தான் இருக்கும் நிலையில் அவரோ அஜித் போர்ஷனிலேயே இதுவரை 50 சதவீதம்தான் எடுத்திருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. மேலும் லைகா நிறுவனமும் மகிழை அழைத்து விரைவில் முடிக்கும்படி சொல்லியதாகவும் ஒரு தகவல் உலாவியது.

எல்லாம் பொய்: ஆனால் அது எல்லாம் சுத்த பொய். இருவரும் நல்ல புரிதலில் இருக்கிறார்கள் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. நிலைமை இப்படி இருக்க அஜித் இப்போது ஷூட்டிங்கிலிருந்து குட்டி பிரேக் எடுத்திருக்கிறார். தன்னுடைய மகன் பிறந்தநாள் வருவதாலும்; புத்தாண்டு கொண்டாட்டத்துக்காகவும் அந்த பிரேக்கை அவர் எடுத்திருக்கிறார்.

Ajith Reaction To Fans in Dubai Goes Viral on Social Media

குடும்பத்துடன் அஜித்: தற்போது அந்த பிரேக்கை தனது குடும்பத்தாருடன் செலவழித்துவருகிறார் அஜித்குமார். துபாய்க்கு ஷாலினி, அனௌஷ்கா, ஆத்விக் உள்ளிட்டோர் சென்றிருக்கின்றனர். அப்போது துபாயில் சொகுசு படகில் அஜித் அவர்களுடன் சென்றார். அந்த சமயத்தில் அவரை கவனித்த அங்கிருந்த தமிழ் ரசிகர்கள், தல தல என்று அழைத்தார்கள். உடனடியாக அஜித் அவர்களை திரும்பி பார்த்து கையசைத்துவிட்டு சென்றார்.

தலக்கு நோ சொன்ன அஜித்: அந்த வீடியோ இணையத்தில் ஒருபக்கம் ட்ரெண்டானாலும் மறுபக்கம் சில ட்ரோல்களையும் சந்தித்திருக்கிறது. அதாவது, தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என அஜித் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார். தல என்று கூப்பிடாதீர்கள் என சொல்லிவிட்டு தல என ரசிகர்கள் அழைத்தால் இவர் எதற்காக ரியாக்‌ஷன் செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர் ரசிகர்களில் ஒருதரப்பினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X