ஏகே 62ல் அஜித் லுக் இதுதானா? வெளிநாட்டில் ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
சென்னை: நடிகர் அஜித் போர்ச்சுகல் உள்ளிட்ட வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட ரீசன்ட் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
அஜித்தின் ஏகே 62 படத்தின் அப்டேட் எப்போ வரும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான லைகா எப்போ அறிவிக்கும் என அஜித் ரசிகர்கள் ரொம்பவே பொறுமையுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஏகே 62 படத்தில் அஜித்தின் லுக் இப்படித்தான் இருக்குமா? என சமீபத்தில் வெளியாகி வரும் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஓடிடியில் கலக்கும் துணிவு
அஜித்தின் துணிவு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி 1 மாதம் முடிவதற்குள்ளே நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்தியா மட்டுமின்றி மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் துணிவு தான் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. வங்கியில் நடைபெறும் மோசடி குறித்து வெளியான துணிவு படத்தை ஓடிடியில் அஜித் ரசிகர்கள் அதிகம் பார்த்து வருகின்றனர்.

வெளிநாட்டில் அஜித்
ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு நடைபெற கால தாமதம் ஆகும் என்பதை அறிந்து கொண்ட நடிகர் அஜித் வெளிநாடுகளில் சுற்றுலா செய்து வருகிறார். சமீபத்தில் போர்ச்சுகலில் உள்ள ஒரு பீச்சில் அஜித் சுற்றுலா செய்த புகைப்படத்தை நடிகை ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அஜித் ரசிகர்களை ஹேப்பி ஆக்கினார்.

லண்டனில் மீட்டிங்
அதே நேரத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி லண்டனில் ஏகே 62 படத்துக்கான மீட்டிங்கில் உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் ஏகே 62 அப்டேட்டை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அதற்கான பணிகளும் தீவிரம் ஆகி வருவதாக கூறுகின்றனர்.

ரசிகர்களுடன் அஜித்
இந்நிலையில், வெளிநாட்டில் லேட்டஸ்ட்டாக ரசிகர்கள் சிலர் உடன் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட அசத்தல் புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் அஜித்தின் போட்டோக்கள் வெளியானாலே அதனை தொடர்ந்து ஹாட் அப்டேட்களும் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

ஏகே 62 லுக் இதுதானா
ரசிகர்களுடன் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் சமீபத்தில் அஜித்தின் மனைவி ஷாலினி வெளியிட்ட புகைப்படங்களில் துணிவு படத்தில் இருந்ததை போலவே வெள்ளை முடி மற்றும் வெள்ளை தாடி லுக்கிலேயே அஜித் வலம் வருகிறார். ஏகே 62 படத்திலும் இதே லுக்கில் தான் அஜித் நடிக்கப் போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செம மாஸ் லுக்
துணிவு படத்தில் அஜித் இந்த லுக்கில் வில்லத்தனத்தில் சும்மா மிரட்டி எடுத்து இருப்பார். அஜித்தின் லுக்கிற்காகவே படத்தை அஜித் ரசிகர்கள் வேறலெவலில் கொண்டாடினார்கள். இந்நிலையில், ஏகே 62 படத்திலும் இதே லுக்கில் அஜித் நடித்தால் கண்டிப்பாக அடுத்த பிளாக்பஸ்டர் கன்ஃபார்ம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சின்ன சின்ன மாற்றங்களுடன் இதே லுக்கில் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











