Ajith: கோடிக்கணக்கில் கடன் இருந்தும் அஜித் எடுத்த அதிரடி முடிவு... பணத்துக்காக ஓக்கே சொன்ன விஜய்!

சென்னை: எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் வரிசையில் விஜய் - அஜித் இருவரில் யார் டாப் என்பது தான் இன்றைய ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

ஒரே காலக்கட்டத்தில் அறிமுகமான இருவருமே இன்று கோலிவுட்டின் முன்னணி நாயகர்களாக கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில், கோடிக்கணக்கில் கடன் இருந்தும் ரசிகர்களின் நலனுக்காக அஜித் ஒரு விளம்பரத்தில் நடிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.

ஆனால், விஜய் அதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் அதே விளம்பரத்தில் நடித்தது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

 Ajith refused to act in the Coca-Cola commercial, and Vijay acted for money

No சொன்ன அஜித்... Yes சொன்ன விஜய்: அமராவதி திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான அஜித், முதலில் விளம்பர மாடலிங் செய்துவந்துள்ளார். அப்போது தான் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. இப்போதும் அஜித் நடித்த பிரபல சப்பல் விளம்பரத்தின் வீடியோ திடீரென ட்ரெண்டாவதைப் பார்க்க முடியும். இது மட்டுமின்றி மேலும் சில விளம்பரங்களிலும் அஜித் நடித்துள்ளார்.

அதேநேரம், சினிமாவில் ஹீரோவாக சக்சஸ் ஆனதும் தனது நடவடிக்கைகளை அதிகமாக மாற்றிக்கொண்டார் அஜித். ஆரம்பம் முதலே அவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருந்தது. அப்போது தான் அஜித் - விஜய் என்ற போட்டி உச்சம் தொட்டது. இருவரது ரசிகர்களும் தங்களது ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது பயங்கரமான அட்ராசிட்டி செய்யத் தொடங்கினர்.

 Ajith refused to act in the Coca-Cola commercial, and Vijay acted for money

இந்நிலையில், கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த தருணத்தில் பைக் ரேஸ், கார் ரேஸ்களில் ஆக்டிவாக கலந்துகொண்டார் அஜித். வெற்றித் தோல்வியை கடந்து அனைத்துவகையான போட்டிகளிலும் பங்கேற்ற அஜித்துக்கு சரியான ஸ்பான்ஸர் அமையவில்லை. அதனால், அவருக்கு சுமார் 5 கோடி ரூபாய் வரை கடன் ஏற்பட்டுள்ளது.

அப்போது அவருக்கு பிரபல குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக சில கோடிகள் வரை சம்பளம் கொடுக்கவும் அந்நிறுவனம் ரெடியாக இருந்தது. அந்நேரத்தில் அஜித்தின் மார்க்கெட் உச்சத்தில் இருந்ததால் அவரை வைத்து தங்களது விளம்பரத்தை எடுக்க குளிர்பான நிறுவனம் நினைத்தது. பலமுறை வற்புறுத்தியும் அஜித் அந்த விளம்பரத்தில் நடிக்க நோ சொல்லிவிட்டாராம்.

அந்த குளிர்பானம் உடல்நலத்துக்கு தீங்கானது என்ற விமர்சனம் இருந்ததால் அஜித் மறுப்புத் தெரிவித்துவிட்டார். தனது ஹீரோ நடித்துள்ள விளம்பரம் என ரசிகர்கள் அதில் அடிக்ட் ஆகிவிடக் கூடாது என அவர் எச்சரிக்கையாக இருந்துள்ளார். அதனால், கடன் இருந்தாலும் பரவாயில்லை இந்த விளம்பரத்தில் நடிக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளார்.

இதனால், அஜித்தை விட்டுவிட்டு விஜய் பக்கம் சென்றது அந்த குளிர்பானம் நிறுவனம். அஜித் நடிக்க மறுத்தது தெரியாமல் விஜய் ஓக்கே என சொல்லிவிட்டாராம். மேலும், கோடிகளில் சம்பளம் கிடைப்பதால் அவருக்கு இது ஜாக்பாட் போல தெரிந்துள்ளது. அதன்பின்னர் விஜய் ஸ்டைலிஷாக நடனமாடி உருவான அந்த விளம்பரம் சக்கைப்போடு போட்டது.

 Ajith refused to act in the Coca-Cola commercial, and Vijay acted for money

கடன் இருந்தும் ரசிகர்களுக்காக அஜித் நோ சொன்ன நிலையில், விஜய் சம்மதம் தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் அஜித் இன்னொரு காஃபி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துவிட்டு பின்னர் அதற்கு என்ட் கார்டு போட்டது தனிக்கதை. அதன்பின்னர் விளம்பரம் பக்கமே அஜித் எட்டிப்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல வருடங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X