அதெல்லாம் முடியவே முடியாது... ஐஸ்வர்யா ராய்-யையே டீலில் விட்ட அஜித்... அப்பவே தல கெத்து தான்!

சென்னை: அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 திரைப்படத்தின் அபிஸியல் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

லைகா தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே 2000ம் ஆண்டில் அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் த்ரோபேக் ஸ்டோரி ஒன்று வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தில் ஒரேயொரு காரணத்திற்காக ஐஸ்வர்யா ராய் உடன் நடிக்க அஜித் மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

 ஏகே 62 அப்டேட் - வரும் ஆனா வராது

ஏகே 62 அப்டேட் - வரும் ஆனா வராது

அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அஜித். விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த இந்தப் படம் தற்போது இயக்குநர் மகிழ் திருமேனியின் கைகளில் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து இதுவரை எந்த அபிஸியல் அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனிடையே ரஜினியின் தலைவர் 170 அப்டேட்டை லைகா நிறுவனம் நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

தற்போதெல்லாம் ஆக்‌ஷன் ஜானர் படங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித், கேரியரின் ஆரம்பத்தில் காதல் திரைப்படங்கள் அதிகம் நடித்து வந்தார். ஆசை, காதல் கோட்டை, வாலி, உன்னைத்தேடி போன்ற படங்கள் வரிசையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் நடித்திருந்தார். ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான இசையமத்த இந்தப் படத்தில் அஜித்துடன் மம்முட்டி, அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு ஆகியோர் லீடிங் கேரக்டரில் நடித்திருந்தனர்.

 ஐஸ்வர்யாவுக்கு நோ சொன்ன அஜித்

ஐஸ்வர்யாவுக்கு நோ சொன்ன அஜித்

இந்தப் படத்தில் அஜித்தின் நடிப்பு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. உதவி இயக்குநர், தபுவின் காதலன் என அட்டகாசமாக ஸ்கோர் செய்திருந்தார். மெல்லிய தாடியுடன் செம்ம ஹேண்ட்ஸம்மாக ஸ்க்ரீனில் வரும் அஜித், ரசிகர்கள், ரசிகைகளுக்கு பாசிட்டிவ் வைப் கொடுத்திருப்பார். இந்நிலையில், இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக முதலில் ஐஸ்வர்யா ராய் தான் நடிக்கவிருந்தாராம். ஆனால், அஜித் தான் அதற்கு நோ சொன்னதாக தெரிகிறது.

 அதெல்லாம் முடியவே முடியாது

அதெல்லாம் முடியவே முடியாது

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் தனக்கு ஜோடியாக அஜித் நடிக்க வேண்டும் என்றால், தாடி இருக்கக் கூடாது என கண்டிஷன் போட்டுள்ளார் ஐஸ்வர்யா ராய். ஆனால், ஐஸ்வர்யா ராயின் கண்டிஷனுக்கு தலை ஆட்டாத அஜித், அதெல்லாம் முடியவே முடியாது எனக்கு ஐஸ்வர்யா ராய் முக்கியம் இல்லை, தாடி தான் முக்கியம் என உறுதியாக மறுத்துவிட்டாராம்.

 அஜித்துக்கு ஜோடியான தபு

அஜித்துக்கு ஜோடியான தபு

உலக அழகி என்ற பெருமையுடன் திரையுலகில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய்யுடன் ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகர்களும் போட்டிப் போட்ட காலம் அது. ஆனால், அப்போதே ஐஸ்வர்யா ராய்யை அஜித் கெத்தாக டீலில் விட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் தபுவை உருகி உருகி காதலிக்கும் காட்சிகளில் நடித்து சிலிர்க்க வைத்தார். அஜித்தின் இந்த முடிவுக்கு பின்னரே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக மம்முட்டி நடித்ததாக சொல்லப்படுகிறது. பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத அஜித், படங்களில் நடிக்கும் போதும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் தான் இருந்துள்ளதாக ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X