இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்... அஜீத் படத் தலைப்பு தீபாவளிக்கு ரிலீசாம்!
பொதுவாக ஒரு படத்தின் பாடல், ட்ரைலர் அல்லது படத்தை விசேஷ நாட்களில் வெளியிடுவதைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் ஒரு படத்தின் தலைப்பையே தீபாவளியை முன்னிட்டு வெளியிடப் போகிறார்களாம். அது அஜீத் நடிக்கும் கவுதம் மேனன் படத்தின் தலைப்பு!
இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட படப்பிடிப்பே முடியப் போகிறது. ஆனால் படத்தின் தலைப்பை அறிவிக்காமல் ரகசியம் காக்கிறார்கள். அஜீத் படங்களுக்கு அதை ஒரு ட்ரெண்டாகவே வைத்துவிட்டார்கள்.

சத்யா
இப்படத்தின் தலைப்பாக ‘சத்யா' அல்லது ‘ஆயிரம் தோட்டாக்கள்' ஆகிய பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இதுதவிர, மேலும் 3 தலைப்புகளை கௌதம் மேனன் பரிசீலனையில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தீபாவளிக்கு...
இந்நிலையில், ஆயுத பூஜைக்கே படத்தின் தலைப்பை வெளியிடுவார்கள் என கூறப்பட்டது. ஆனால் வெளியிடவில்லை. தீபாவளியை முன்னிட்டு இந்தப் படத் தலைப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.

நவம்பரில் பாடல்கள்
இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை நவம்பரில் வெளியிடப் போகிறார்களாம்.

பொங்கல் ரிலீஸ்
பொங்கலுக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications