»   »  அஜீத் படத்துக்கு தலைப்பு வேதாளம்... தீபாவளி வெளியீடு!

அஜீத் படத்துக்கு தலைப்பு வேதாளம்... தீபாவளி வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜீத் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு அறிவிப்புப் படலம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது.

இந்தப் படத்துக்கு வேதாளம் என்று தலைப்பிட்டுள்ளனர். படத்தின் முதல் பார்வை போஸ்டர்களும் நேற்று நள்ளிரவுக்குப் பிறகு வெளியாகியுள்ளன.

ரெட் கெட்டப்

ரெட் கெட்டப்

முன்பு ரெட் என்ற தலைப்பில் ஒரு அஜீத் படம் வெளியானதே.. அதே போன்ற மொட்டை, சிவப்பு சட்டை மற்றும் கழுத்தில் பெரிய தாதா செயினுடன் இந்த முதல் பார்வை போஸ்டர்களில் காட்சியளிக்கிறார் அஜீத்.

ஸ்ருதி - லட்சுமி

ஸ்ருதி - லட்சுமி

சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜீத்துடன் ஸ்ருதி ஹாஸன், லட்சுமி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். அஜீத்துக்கு இது 56வது படமாகும்.

ஏஎம் ரத்னம்

ஏஎம் ரத்னம்

அஜீத்தின் ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார் ஏ எம் ரத்னம்.

தீபாவளிக்கு

தீபாவளிக்கு

அனிருத் இசையில் உருவாகியுள்ள படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிடப் போவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    English summary
    The long wait is over.. Ajith Kumar's 56th film has titled as "Vedalam" produced by Sri Sai Raam Creations, Direction by Siva. The movie will be released on Diwali 2015.
    Please Wait while comments are loading...