லிஸ்ட் ரெடி... எல்லாரையும் மொத்தமா வண்டில ஏத்துங்க... ஏகே 62 படப்பிடிப்புக்கு நாள் குறித்த லைகா!
சென்னை: அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களுடன் வரவேற்புடன் சூப்பர் ஹிட் அடித்தது.
இதனையடுத்து லைகா தயாரிக்கும் பிரம்மாண்டமான படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.
இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக லைகா தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அஜித்தின் ஏகே 62
அஜித்தின் ஏகே 62 பட அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தரமான ஹிட் கொடுத்ததால், ஏகே 62 மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறிவிட்டது. லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள அவரது 62வது படத்தை விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இன்னும் அபிசியல் அப்டேட் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகே டைட்டில் ப்ரோமோ
ஏகே 62 படத்திற்காக லைகா தரப்பில் இருந்து 200 கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட் ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம் இந்தப் படத்தின் டைட்டில் ப்ரோமோ மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாம். விஜய்யின் தளபதி 67 அப்டேட் ஸ்டைலில், ஏகே 62 டைட்டில் ப்ரோமோவையும் வெளியிடப் போகிறதாம் லைகா.

ஏகே 62 லிஸ்ட் ரெடி
ஏகே 62 டைட்டில் ப்ரோமோவுடன் இந்தப் படத்தில் கமிட் ஆகியுள்ள நடிகர்கள் குறித்த அப்டேட்டும் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடிப்பதாக அப்டேட் கிடைத்துள்ளது. அதேபோல், அதர்வா, பிக் பாஸ் கவின், ஜான் கெக்கென் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக லேட்டஸ்ட் அப்டேட்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக நீரவ்ஷா ஒளிப்பதிவாளராக கமிட் ஆகியுள்ளாராம்.

விரைவில் ஷூட்டிங்
அஜித்தின் பில்லா, நேர்கொண்ட பார்வை படங்களுக்கு சினிமாட்டோகிராபி செய்தவர் நீரவ்ஷா. குறிப்பாக பில்லா படத்தில் அஜித்தை யாருமே எதிர்பார்க்காத வகையில் செம்ம ஸ்டைலிஷாக காட்டியிருந்தார். அதனால் ஏகே 62 படத்துக்கும் நீரவ்ஷா சரியாக இருப்பார் என அஜித் முடிவு செய்துவிட்டாராம். இந்நிலையில், அருண் விஜய், அதர்வா, கவின், ஜான் கொக்கென் ஆகியோரும் ஏகே 62வில் இணைவது குறித்து விரைவில் அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எகே 62 ரிலீஸ் தேதி
மார்ச் மாதம் தொடங்கும் ஏகே 62 ஷூட்டிங் இரண்டு அல்லது மூன்றே ஷெட்யூல்களில் விரைவாக முடிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. மேலும், பொங்கலுக்கு விஜய்யின் வாரிசுக்கு போட்டியாக துணிவு களமிறங்கியது. அதேபோல், லியோ படத்துக்கு போட்டியாக ஏகே 62-ஐ களமிறக்க அஜித் முடிவு செய்துள்ளாராம். இதனால் எப்போது வேண்டுமானாலும் ஏகே 62 டைட்டில் ப்ரோமோ வெளியாகும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











