ப்ரோமோ இல்லாமல் அஜித்தின் ஏகே 62 அப்டேட்... டைட்டிலில் அதிரடி மாற்றம்... ரசிகர்கள் குழப்பம்!
சென்னை: அஜித் நடிக்கும் ஏகே 62 பட அப்டேட் மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக விக்னேஷ் சிவன் இயக்குவதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், ஏகே 62 அப்டேட் டைட்டில் ப்ரோமோவுடன் வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது.
அதேபோல், இந்தப் படத்திற்கு டெவில் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது இதுகுறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

விரைவில் ஏகே 62 அப்டேட்
இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு கிடைத்த நெகட்டிவான விமர்சனங்களை துணிவு மூலம் தூக்கி அடித்தது அஜித் - அ வினோத் கூட்டணி. துணிவு படம் கொடுத்த புத்துணர்ச்சியால், ஏகே 62 ஷூட்டிங் செல்ல ரெடியாகிவிட்டார் அஜித். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கிடைத்த தகவலின்படி மகிழ் திருமேனி இயக்குவதாகக் கூறப்படுகிறது.

எகே 62 டைட்டில் ப்ரோமோ?
அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி குறித்து இன்னும் அபிஸியல் அப்டேட் வெளியாகவில்லை. அதனால் விரைவில் லைகா தரப்பில் இருந்து நல்ல செய்தி வரும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய்யின் லியோ அப்டேட் போன்று, ஏகே 62 படத்திற்கான டைட்டில் ப்ரோமோவும் வெளியாகும் என்றே சொல்லப்பட்டது. ஆனால், டைட்டில் ப்ரோமோவிற்கான ஷூட்டிங் இன்னும் முடியவில்லை என்பதால், விரைவில் ஏகே 62 தலைப்பை மட்டும் அறிவிக்க படக்குழு முடிவுசெய்துள்ளதாம்.

அவசரம் காட்டும் அஜித்
இனிமேல் டைட்டில் ப்ரோமோ ஷூட் செய்தால் இன்னும் லேட் ஆகும் என்பதால், ஏகே 62 போஸ்டரை மட்டும் வெளியிட அஜித் அவசரம் காட்டுகிறாராம். லைகாவும் வேறுவழியில்லாமல் ஓக்கே சொல்லிவிட்டதாக தெரிகிறது. இதனிடையே சென்னையில் நடைபெற்ற ஏகே 62 பூஜையில், மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் மட்டும் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து உடனே ஏகே 62 அப்டேட் வெளியானதும் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு ரெடியாகிவிட்டதாம்.

ஏகே 62 டைட்டில் இதுதானா?
முக்கியமாக ஏகே 62 படத்திற்கு டெவில் என்ற தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. துணிவு படத்தில் டார்க் டெவில் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் அஜித். தற்போது அந்த டெவில் என்ற பெயரையே ஏகே 62 டைட்டிலாக வைத்துவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், அதுவும் உண்மை இல்லை என்றே கூறப்படுகிறது. மகிழ் திருமேனி தனது படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பதையே விரும்புவார். அதனால் ஏகே 62 படத்துக்கு டெவில் என்ற டைட்டில் வாய்ப்பே இல்லை எனக் கூறப்படுகிறது.

ரிலீஸ் தேதியும் கன்ஃபார்ம்?
அஜித்துடன் அருண் விஜய், அதர்வா, பிக் பாஸ் கவின், ஜான் கெக்கென் ஆகியோரும் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஏகே 62 படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷாவும், இசையமைப்பாளராக அனிருத்தும் கமிட் ஆகியுள்ளார்களாம். மார்ச் மாதம் தொடங்கும் ஏகே 62 ஷூட்டிங் இரண்டு அல்லது மூன்றே ஷெட்யூல்களில் விரைவாக முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. அதனால், இந்தாண்டு இறுதிக்குள் ஏகே 62 படத்தை வெளியிட லைகா முடிவுசெய்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











