Ajith: அஜித் ஒரு லேபிள் மட்டுமே... அவருக்கு இதெல்லாம் தேவையா..? விமர்சனத்துக்குள்ளான AK Moto Ride

சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் அடுத்து விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிப்பது மட்டும் இல்லாமல் பைக் டூரில் அதிக ஆர்வமுள்ள அஜித் சமீபத்தில் நேபாளம், பூடான் நாடுகளுக்கு பைக் டிரிப் சென்று வந்தார்.

இதனைத் தொடர்ந்து விரைவில் உலகம் முழுவதும் பைக்கில் டூர் செல்ல திட்டமிட்டுள்ளாராம்.

இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் ஏகே மோட்டோ ரைட் என்ற நிறுவனத்தை தொடங்கிய அஜித் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

 Ajiths AK Moto Ride Company is under heavy criticism

அஜித்தின் ஏகே மோட்டோ ரைட் மீது விமர்சனம்:தமிழ்த் திரையுலகில் தன்னிகரில்லா நடிகராக வலம் வருபவர் அஜித். மாஸ் ஹீரோவாக கலக்கி வரும் அஜித்துக்கு லட்சக் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அதேபோல், சினிமா மட்டும் இல்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ் என எப்போதுமே பிஸியாக இருக்கும் அஜித், கடந்த சில மாதங்களாக பைக் டூர் செல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

துணிவு படப்பிடிப்பின் நடுவே சில நாடுகளில் பைக் டூர் சென்றிருந்த அஜித், சமீபத்தில் நேபாளம், பூடான் நாடுகளுக்கும் சென்று வந்தார். இந்நிலையில், ஏகே மோட்டோ ரைட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக இரு தினங்களுக்கு முன்னர் அஜித் அறிவித்திருந்தார். அதில், AK Moto Ride எனும் சுற்றுலா நிறுவனத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். பைக் ரைடர்கள், சாகச ஆர்வலர்களுக்கு இந்த AK Moto Ride சுற்றுலாப் பயணங்களோடு, பலவித அனுபவங்களை வழங்கும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், அஜித்தின் ஏகே மோட்டோ ரைடு அறிவிப்பு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து மூத்த சினிமா செய்தியாளர் ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், அஜித் நடிக்கும் படங்கள் குறித்தும் அவர் நடிப்பு குறித்தும் எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு. சினிமாவில் அவர் வெறும் 'எண்டர்டெயினர்' என்பதைத் தாண்டி எதுவுமில்லை. தனிப்பட்ட முறையில் அஜித்குமாரை மிகவும் நேசிப்பவன்.

அஜித்தின் மனிதாபிமானம், உதவும் குணம், தன்னடக்கம், துணிச்சல் வேறு நடிகர்களிடத்தில் காணக் கிடைக்காத அற்புதங்கள். "லைஃப் பர்ஸ்ட் புரொபஷனல் நெக்ஸ்ட்" என்கிற அவரது வாழ்க்கை முறையும் நிரம்ப பிடிக்கும். ஆனால் அவரது ஏகே மோட்டோ ரைடு பற்றிய அறிவிப்பு அவர் மீது கொண்டிருந்த தனிப்பட்ட மதிப்பீட்டில் சற்று சறுக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, உலகம் முழுக்க அஜித் பைக் பயணம் செல்வது அவரது தனிப்பட்ட விருப்பம், ஆசை, லட்சியம் எதுவேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இதனால் மகிழ்வது அஜித் என்கிற தனிமனிதன் மட்டுமே. இந்த சமூகத்திற்கு அதனால் எந்தப் பயனும் இல்லை. இதன் அடுத்தகட்டமாக ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்கிற புதிய சுற்றுலா வர்த்தக நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள், பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும் என்று கூறியிருக்கிறார். நிச்சயமாக இந்த நிறுவனத்தை ஏதோ ஒரு நிறுவனம்தான் நடத்த இருக்கிறது. இதற்கான முகமூடி ஒரு லேபிள் மட்டுமே அஜித். இப்படியான ஒரு நிறுவனத்தை அஜித் நிர்வகிக்க தேவையான நேரம் அவரிடம் இல்லை என்பது கண்கூடான உண்மை என விமர்சித்துள்ளார்.

 Ajiths AK Moto Ride Company is under heavy criticism

மேலும், இந்த நிறுவனத்தை அஜித் ஆரம்பிக்க இரு முக்கிய காரணம் இருக்க வேண்டும். ஒன்று அவருக்கு சினிமாவின் மூலம் வருகிற வருமானம் போதாமல் இருக்கலாம். அல்லது பைக் பயணத்தில் இருக்கும் அதீத ஆர்வம் காரணமாக 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என கருதி இருக்க வேண்டும். இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும் அது சரியானதல்ல. உழைக்கும் மக்களின் பணத்தில் கோடிகளில் சொகுசு வாழ்க்கை வாழும் அஜித், அந்த மக்களுக்கு உதவுகிற வகையில்தானே ஏதாவது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

ஒரு சில பணக்கார இளைஞர்களுக்காக இப்படியொரு நிறுவனத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது. மக்களால் வாழும் அவர், மக்களுக்காக ஏதாவது செய்யலாமே. மருத்துவமனை கட்டலாம், கல்வி நிறுவனங்கள் கட்டலாம். முதியோர், ஆதரவற்றோர் இல்லம் கட்டலாம். குறைந்த விலையில் விற்பனை செய்யும் வியாபாரக் கூடங்கள் அமைக்கலாம் என்றுள்ளார்.

அல்லது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி செய்வது போல் மாவட்டம் தோறும் ரத்த வங்கி அமைக்கலாம். சூர்யா, கார்த்தி நடத்துவது போல் தொண்டு நிறுவனம் அமைக்கலாம். இத்தனையையும் விடுத்து கோடீஸ்வரர்கள் மட்டுமே பங்குபெறக்கூடிய பைக் டூர் நடத்துவதன் மூலம் என்ன சாதிக்கப்போகிறார் அஜித் எனக் கேள்வியெழுப்பியுள்ளார். அவரின் இந்த விமர்சனங்களை ரசிகர்கள் சரியென்றே கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X