பேங்க் கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் ஏகே61.. இன்னொரு சூப்பர் அப்டேட்டும் இருக்கு!
ஐதராபாத் : அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி வரும் படம் ஏகே61. தீபாவளி ரிலீசாக படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் சிறப்பான பேங்க் மற்றும் மவுண்ட் ரோடு செட் போடப்பட்டு படம் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்னும் 15 -20 நாட்கள் மட்டுமே சூட்டிங் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ஏகே61. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படத்திற்காக பிரம்மாண்டமான அளவில் பேங்க் மற்றும் மவுண்ட் ரோட் செட் போடப்பட்டு சூட்டிங் நடைபெற்று வருகிறது.

மூன்றாவது முறையாக கூட்டணி
ஹெச் வினோத் மற்றும் போனிகபூருடன் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. முந்தைய படங்களை தேவையான அளவில் தன்னுடைய ஸ்பெஷலை தரத்தவறியுள்ளார் ஹெச் வினோத்.

தீபாவளி ரிலீஸ்
இந்நிலையில் இந்தப் படம் அவரது தீரன் அதிகாரம் ஒன்று படத்தை போன்ற அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று ரசிகர்களை விருப்பத்துடன் காத்திருக்கின்றனர். படம் வரும் தீபாவளிக்கே ரிலீசாக உள்ள நிலையில், சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹீரோவும் வில்லனும்
படத்தில் அஜித்திற்கு இரண்டு கேரக்டர்கள் என்று கூறப்படுகிறது. வில்லனாகவும் ஹீரோவாகவும் அஜித் நடித்துவரும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் மஞ்சு வாரியர். மேலும் நட்சத்திரப் பட்டாளங்களுடன் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் சூட்டிங் முடிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரபல பேங்க் கொள்ளை
பேங்க் கொள்ளையை மையமாக வைத்து படம் உருவாகி வருவதாகவும் இதற்காக பேங்க் செட் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிரபலமான பேங்க் கொள்ளையை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி படத்தை பீட் செய்யுமா?
முன்னதாக கார்த்தியை வைத்து ஹெச் வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் இந்திய அளவில் பிரபலமான கொள்ளையர்களை மையமாக வைத்தே படம் எடுக்கப்பட்டிருந்தது. அதேபோல இந்திய அளவில் முக்கியமான பேங்க் கொள்ளையை மையமாக வைத்து தற்போது ஏகே61 படம் உருவாகி வருவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

பாடல்கள் இல்லை
விறுவிறுப்பான இந்தக் கதையில் இடையில் பாடல்கள் இல்லை என்று தற்போது படக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் அந்தக் குறையை போக்கும்வகையில் படத்தில் சிறப்பான இரண்டு தீம் ட்ராக்குகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் படம் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
Recommended Video

80 சதவிகித சூட்டிங் ஓவர்
படத்தின் சூட்டிங் தற்போது 80 சதவிகிதம் பூர்த்தியாகியுள்ளதாகவும் இன்னும் 15 முதல் 20 நாட்களில் சூட்டிங் முழுமையாக நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. தீபாவளிக்கு படத்தோட அதிரடிக்காக இப்போது முதலே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தின் டைட்டிலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











