twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தள்ளிப்போன அஜித் படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. என்ன காரணம் தெரியுமா?

    |

    சென்னை : நடிகர் அஜித்தின் ஏகே61 படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளது.

    வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பூனாவில் துவங்கி நடைபெறவுள்ளது.

    இந்தப் படத்தில் அஜித் வில்லனாகவும் ஹீரோவாகவும் இரண்டு கெட்டப்புகளில் மிரட்டவுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் வெளியிடப்படவில்லை.

    சகவாசமே வேண்டாம்னு விலகிய மாஸ் ஹீரோ.. மீண்டும் மடக்கிய அந்த பெரிய நிறுவனம்.. எப்படி தெரியுமா? சகவாசமே வேண்டாம்னு விலகிய மாஸ் ஹீரோ.. மீண்டும் மடக்கிய அந்த பெரிய நிறுவனம்.. எப்படி தெரியுமா?

    3வது முறையாக கூட்டணி

    3வது முறையாக கூட்டணி

    நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து 3வது முறையாக இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூருடன் தனது ஏகே61 படத்திற்காக இணைந்துள்ளார். இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் கடந்த சில வாரங்களாக நடந்து முடிந்துள்ளது.

    ஹீரோவும் நானே.. வில்லனும் நானே

    ஹீரோவும் நானே.. வில்லனும் நானே

    பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் வில்லனாகவும் ஹீரோவாகவும் இரண்டு வேடங்களில் இந்தப் படத்தில் அஜித் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் ஒரு கெட்டப்பில், நீண்ட தாடியுடன், கூலர்ஸ், காதில் கடுக்கன் சகிதம் அஜித் காணப்படுகிறார்.

    பூனாவில் அடுத்தக்கட்ட சூட்டிங்

    பூனாவில் அடுத்தக்கட்ட சூட்டிங்

    இதன் இரண்டாவது கெட்டப்பை ரகசியமாக வைக்க படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், பூனாவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல்வாரத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் நிறைவடைந்த நிலையில், இடையில் சிறிது கேப் எடுத்துக் கொண்டு பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் அஜித்.

    துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்

    துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்

    தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியிலும் அஜித் கலந்துக் கொண்டார். இதில் 4 தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை அவரது டீம் வெற்றிக் கண்டுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக மீண்டும் ஏகே61 படத்தின் சூட்டிங்கில் சில தினங்களில் கலந்துக் கொள்கிறார் அஜித்.

    தள்ளிப்போன பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

    தள்ளிப்போன பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

    முன்னதாக இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், படத்தின் சூட்டிங் முதல் வாரத்தில் துவங்கவுள்ளதால் பர்ஸ்ட் லுக் வெளியீடு மேலும் இரண்டு வாரங்களுக்கு தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Actor Ajith's AK61 movie first look poster release to be planned 3rd week of August
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X