சிவாஜி தி பாஸ் டைப் படமா ஏகே62... சூட்டிங் எப்ப துவங்குதுன்னு பாருங்க!
சென்னை : நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் சூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏகே62 படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

ஏகே61 படம்
நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை இயக்கியிருந்தார் எச் வினோத். தயாரித்திருந்தார் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். இந்நிலையில் இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக தற்போது ஏகே61 படத்திற்காக இணைந்துள்ளனர். படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பிரம்மாண்ட செட்கள்
படத்திற்காக பிரம்மாண்டமான பேங்க் மற்றும் மவுண்ட் ரோடு செட்கள் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு கெட்டப்புகளில் அஜித் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. ஒரு கெட்டப்பில் நீண்ட தாடி, காதில் கடுக்கண் மற்றும் கூலர்சுடன் அஜித் காணப்படுகிறார்.

தீபாவளி ரிலீஸ்
மற்றொரு கெட்டப்பை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். கடந்த இரண்டு படங்களை போல இல்லாமல் இந்தப் படத்தில் அஜித்தை மாற்றுக் கோணத்தில் ஹெச் வினோத் இயக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படம் தீபாவளி ரிலீசாக திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வழக்கத்தை மாற்றிய அஜித்
அஜித் எப்போதுமே ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதை வழக்கமாக கொண்டவர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக, ஏகே61 படம் துவங்குவதற்கு முன்னதாகவே ஏகே62 படத்தின் அறிவிப்பை அவர் மேற்கொண்டார். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. நயன்தாரா நாயகியாக நடிப்பதாக கூறப்பட்டுள்ளது.

அக்டோபரில் ஏகே62 சூட்டிங்
இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் அக்டோபரில் துவங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தொடர்ந்து 35 முதல் 40 நாட்கள் படத்தின் சூட்டிங் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த கட்ட சூட்டிங்குகளை மேற்கொண்டு படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

மாஸ் + க்ளாஸ் படம்
இதனிடையே, இந்தப் படம் ரஜினிகாந்தின் சிவாஜி தி பாஸ் படம் போன்று, மாஸாகவும் க்ளாஸாகவும் இருக்கும் என்று விக்னேஷ் சிவன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை அவர் துவங்கியுள்ளதாகவும், அவரது ஸ்கிரிப்டை படித்த அஜித்குமார், அதிலிருந்த சில அரசியல் வசனங்களை நீக்க சொன்னதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரசிகர்களை திருப்திப்படுத்தும்
இந்தப் படம் குறித்து முன்னதாக ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன், அஜித்தின் இந்தப் படத்திற்காக ஆத்மார்த்தமாக தான் வேலை செய்வேன் என்றும் பெரிய வட்டத்தைக் கொண்ட அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











