ஜனவரியில் துவங்கும் ஏகே62 படம்.. வேலையை சூப்பர் ஃபாஸ்ட் ஆக்கிவரும் விக்னேஷ் சிவன்!
சென்னை : நடிகர் அஜித்குமார் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் ஏகே61 படத்தில் இணைந்துள்ளது அனைவரும் அறிந்த விஷயம்தான்.
இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு நடந்த நிலையில் சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் அடுத்தக்கட்ட நடந்து முடிந்துள்ளது.
தொடர்ந்து படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் விரைவில் நடத்தப்பட்டு விரைவில் படத்தின் சூட்டிங்கை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார், அடுத்தடுத்த சிறப்பான படங்களை தன்னுடைய ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிக்கத் துவங்கிய அஜித், தன்னுடைய ரசிகர்களை மட்டுமே அடித்தளமாக கொண்டு தன்னுடைய கேரியரை பலப்படுத்தியவர்.

மூன்றாவது முறையாக கூட்டணி
தற்போது தன்னுடைய வயதிற்கு ஏற்றாற்போன்ற படங்களை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பு காட்டி வருகிறார் அஜித். ஹெச் வினோத் -போனிக்கபூர் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து தற்போது ஏகே61 படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டது.

அடுத்தடுத்த கட்ட சூட்டிங்
தொடர்ந்து விசாகப்பட்டினத்திலும் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து விரைவில் படக்குழு அப்டேட் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் சூட்டிங் துவங்கி நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் டைட்டிலும் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.

தீபாவளி ரிலீசுக்கு திட்டமிட்ட ஏகே61
இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்படுவதற்கு முன்னதாகவே தீபாவளிக்கு படம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறப்பான வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் ரிலீஸ்?
தொடர்ந்து இந்தப் படம் டிசம்பரில் வெளியாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பொங்கல் ரிலீசாக படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் வாரிசு படமும் பொங்கல் ரிலீசுக்கு திட்டமிட்டுள்ள நிலையில், வரும் பொங்கல் பண்டிகை இருதரப்பு ரசிகர்களுக்கும் சூப்பர் டூப்பர் பொங்கலாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜனவரியில் துவங்கும் ஏகே62 சூட்டிங்
இதனிடையே அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ள ஏகே62 படத்தின் வேலைகளும் விரைவுப் படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் ஜனவரி 2023ல் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தற்போது விக்னேஷ் சிவன் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் ஆர்வம்
முன்னதாக தானா சேர்ந்தக் கூட்டம், நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்துள்ள விக்னேஷ் சிவன், பெரிய அளவிலான மாஸ் ஹீரோவான அஜித்தை திரையில் எப்படி கொண்டு வருவார் என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











