15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகும் அஜீத்தின் அமர்க்களம்
சென்னை: அஜீத்தின் வெற்றிப் படங்களில் ஒன்றான, அவர் சொந்த வாழ்வில் திருப்பு முனை தந்த படமான அமர்க்களம் 15 ஆண்டுகளுக்குப் பின் மறுவெளியீடாக வருகிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டுஅஜீத்தின் 25-வது படமாக வெளிவந்தது 'அமர்க்களம்'. சரண் இயக்க, பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.
ஒரு மென்மையான காதல் ஹீரோவாக வலம் வந்த அஜீத்துக்கு ஆக்ஷன் ஹீரோ இமேஜைத் தந்தது இந்தப் படம்.

ஷாலினி
அது மட்டுமின்றி இந்தப் படத்தில் திரையில் தனக்கு ஜோடியாக வந்த ஷாலினியையே நிஜ வாழ்விலும் பின்னர் அஜீத் கரம் பிடித்து தனது வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டார்.

சத்தம் இல்லாத தனிமை
இந்தப் படத்தில் அஜீத்துக்காக எஸ்பி பாலசுப்பிரமணியன் மிக உணர்ச்சிப்பூர்வமாகப் பாடிய சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்.. பாடல் படு பிரபலம், அன்றைக்கு. ஷாலினி தன் சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடியிருந்தார் இந்தப் படத்தில்.

டிஜிட்டலில்...
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இப்போது டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு மீண்டும் வெளியாகிறது.

மே 1
அஜீத்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தை வரவேற்க இப்போதே தயாராகி வருகின்றனர் அஜீத் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











