செப்டம்பர் 19-ம் தேதி ஆரம்பம் இசை வெளியீடு
சென்னை: அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படத்தின் இசை வரும் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்- நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் ஆரம்பம். இந்தப் படத்தில் இன்னொரு ஜோடியாக ஆர்யா, டாப்ஸி நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் ராணாவும் முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.
யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் ரீரிக்கார்டிங், மிக்சிங் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.

படத்தை தீபாவளிக்கு வெளியிடவிருப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டனர்.
இந்த நிலையில் படத்தின் பாடல்களை வருகிற 19-ந்தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
முந்தைய அஜீத் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாக்கள் என எந்த நிகழ்வும் பிரமாண்டமாக நடந்தது இல்லை. படத்தில் நடித்துக் கொடுப்பதோடு அஜீத்தும் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்.
அந்தப் பாணியிலேயே 'ஆரம்பம்' படப் பாடல்களையும் விழா எதுவும் நடத்தாமலேயே நேரடியாக ஆடியோ கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications











