தள்ளிப் போடும் பேச்சே இல்லை... தீபாவளிக்கு ஆரம்பம் வெளியாவது உறுதி!

By Shankar

தியேட்டர்கள் பிரச்சினையில் தள்ளிப் போகுமோ என எதிர்ப்பார்க்கப்பட்ட அஜீத்தின் 'ஆரம்பம்' படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது.

அஜீத்-நயன்தாரா, ஆர்யா-டாப்ஸி நடித்திருக்கும் படம் ஆரம்பம். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Ajith's Arrambam confirms for Diwali

இந்நிலையில்தான் ஆரம்பம் பட வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் படம் தீபாவளியன்று வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்தது. கடந்த ஒரு வாரமாக இது பற்றியே ஊடகங்களில் பரபரப்பாக பேச்சப்பட்டு வந்தன.

தற்போது இந்த சந்தேகத்துக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பம் படம் தீபாவளியன்று வெளியாகப் போகிறது என தொடர்ந்து விளம்பரம் கொடுத்து வருகிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் நான் அல்ல என ஏஎம் ரத்னம் நீதிமன்றத்துக்கு விளக்கம் கொடுத்து, அதற்கான ஆவணங்களையும் கொடுத்துவிட்டதால், படத்துக்கு தடை வரவும் வாய்ப்பில்லை.

தியேட்டர்காரர்களிடம் படத்தை தள்ளிப் போடும் பேச்சுக்கே இடமில்லை என கண்டிப்பாகக் கூறிவிட்ட தயாரிப்பாளர், ஓரளவு கணிசமான அரங்குகளையும் பெற்றுவிட்டார். பிரச்சனைகள் தீர்ந்து 'ஆரம்பம்' படம் தீபாவளி விருந்தாக வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X