twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆரம்பம்... முடிந்தது முதல் காட்சி: அட்டகாசமா? அமர்க்களமா? ரசிகர்கள் கருத்து என்ன?

    By Shankar
    |

    சென்னை: அஜீத்தின் தீபாவளி ஸ்பெஷலான ஆரம்பம் படத்தின் முதல் காட்சி சற்று நேரத்துக்கு முன் முடிந்தது.

    இந்தப் படம் எப்படி இருக்கிறது.. என்ற கேள்விக்கு பல ரசிகர்களின் பதில்கள் - கருத்துகள் கலவையாக இருந்தாலும், மிஸ்ஸாகாத தீபாவளி வெடி என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.

    காலை 7 மணிக் காட்சி பார்த்த உள்ளூர் ரசிகர்களும், நேற்று இரவே பார்த்துவிட்ட வெளிநாட்டு ரசிகர்களும் படம் குறித்த தங்கள் கருத்துகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    இரண்டரை மணிநேரம்

    இரண்டரை மணிநேரம்

    கிட்டத்தட்ட 2.38 மணி நேரம் ஓடும் இந்தப் படத்தின் முதல் பாதி செம ஜாலியாக உள்ளது. இரண்டாம் பாதி மட்டும் இன்னும் நன்றாக வந்திருக்கலாம் என்று ஒரு அஜீத் ரசிகர் தெரிவித்தார்.

    அப்படியொன்றும் பெரிய மொக்கை அல்ல

    அப்படியொன்றும் பெரிய மொக்கை அல்ல

    செல்வா என்ற ரசிகர் கூறுகையில், " இந்தப் படத்தின் மீது எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்தான் பார்க்கப் போனேன். எனக்கு இடைவேளை வரை படம் பிடித்திருந்தது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு ரொம்ப சுமார்தான். அதில் இடம்பெற்றுள்ள ப்ளாஷ்பேக்குகள் மொக்கையாக உள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அப்படி ஒன்றும் பெரிய மொக்கையல்ல என திருப்திப்பட்டுக் கொள்ளலாம் என்றார்.

    விஜயகாந்த் வேலை இவருக்கு ஏன்?

    விஜயகாந்த் வேலை இவருக்கு ஏன்?

    இந்தப் படத்தை காசி திரையரங்கில் பார்த்த ரவிகுமார் கூறுகையில், "விஜயகாந்த் நடிப்பிலிருந்து ரிடயராகிவிட்டார் எனத் தெரிந்து, அவர் வேலையை அஜீத் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதாவது சிபிஐ அல்லது ரா அல்லது ஆன்டி பாம்ப் ஸ்க்வாட் ஆபீசர்கள் வேடத்தை இனி இனி அடிக்கடி செய்வாரோ அஜீத் என பயமாக உள்ளது. இந்தப் படத்தில் சுவிஸ் வங்கிக்குப் போகும் கறுப்புப் பணத்தை ரிசர்வ் வங்கிக்குத் திருப்புகிறார் அஜீத், ஆனால் பெரிய சுவாரஸ்யமில்லை," என்றார்.

    அஜீத் ரசிகர்

    அஜீத் ரசிகர்

    அஜீத்தின் பக்கா ரசிகரான ஆனந்த் கூறுகையில், "நாங்க தலயின் நடை உடை நடிப்பை அணுஅணுவாக ரசித்தோம். தல படம்... அருமையான ஆக்ஷன் காட்சிகள்.. இந்த தீபாவளிக்கு இது போதும் எங்களுக்கு," என்றார்.

    ஓடுமா ஓடாதா...

    ஓடுமா ஓடாதா...

    முன்கூட்டியே படம் பார்த்த விமர்சகர் ஒருவர் கூறுகையில், "படம் சுமாருக்கு சற்று மேல் என்பதுதான் உண்மை. முதல் இரண்டு வாங்கள் நன்றாகப் போகும். அதற்கு மேல் ரிபீடட் ஆடியன்ஸ் கையில் இருக்கிறது படம் தப்பிப்பது. ஆனால் திரும்பத் திரும்ப பார்க்கும் அளவுக்கு படம் இல்லை. ஒரு முறை பார்க்கலாம்," என்றார்.

    இன்னொரு மங்காத்தா

    இன்னொரு மங்காத்தா

    திரையுலக விநியோகஸ்தர் ஒருவர் கூறுகையில், "இந்தப் படம் நிச்சயமா நல்ல லாபம் தரும் படமாக அமையும். அதற்கான அத்தனை அம்சங்களும் இருக்கின்றன. நீங்க வேணா பாருங்க, இது நம்ம அஜீத்துக்கு இன்னொரு மங்காத்தாவாக அமையும், என்றார்.

    English summary
    Here are some opinions of public after watched Ajith's Arrambam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X