அஜித்தின் அசல் பட ஷுட்டிங் ஸ்பாட் போட்டோவை வெளியிட்ட ரசிகர்.. நினைவுகளை பகிர்ந்த பிரபல இயக்குநர்!

சென்னை: நடிகர் அஜித்தின் அசல் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோவை பார்த்த இயக்குநர் கவுரவ் நாராயணன் அந்த போட்டோவுக்கு பின் உள்ள சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

அஜித்தின் அசல் படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் அஜித், சமீரா ரெட்டி, பாவனா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இயக்குநர் சரண் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோ ஒன்றை அஜித் ரசிகர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஜாலி பேச்சு

ஜாலி பேச்சு

அந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. போட்டோவில் நடிகர் அஜித், டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் மற்றும் இயக்குனர் கவுரவ் நாராயணனுடன் ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக பேசி கொண்டிருக்கிறார்.

இயக்குநர் கவுரவ் நாராயணன்

இயக்குநர் கவுரவ் நாராயணன்

இந்த போட்டோவை பார்த்த இயக்குநர் கவுரவ் நாராயணன், இது என்னுடைய ஃபேவரைட் மாஸ்டர் ராஜூ சுந்தரம் மற்றும் எப்போதும் என் ஃபேவரைட்டான தல ஆகியோருடன் எடுக்கப்பட்ட என் ஃபேவரைட் போட்டோக்களில் ஒன்று. இது அசல் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது.

நான்ஸ்டாப் ஸ்மைல்

நான்ஸ்டாப் ஸ்மைல்

30 நிமிடம் நான் ஸ்டாப்பாக பேசிக் சிரித்துக் கொண்டிருந்தோம். நான் அவரை சிரிக்க வைக்கும் போது தல கொடுத்த ஒவ்வொரு ரியாக்ஷனும் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

பல படங்களில்..

பல படங்களில்..

இயக்குநர் கவுரவ் நாராயணன், தூங்கா நகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து சிகரம் தொடு, இப்படை வெல்லும் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும் நான் ராஜாவாக போகிறேன், ஆறாது சினம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

எச்சரிக்கை..

எச்சரிக்கை..

அண்மையில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் இந்துக் கடவுள்கள் மற்றும் கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச வீடியோ வெளியிட்ட போது கூட கண்டனம் தெரிவித்திருந்தார் கவுரவ். தங்களின் நம்பிக்கை அசைத்து பார்க்க வேண்டாம் என்றும் எச்சரித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X