twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொஞ்சம் பிளாஷ்பேக்.. ரஜினி வைத்த டைட்டில்.. அஜித்தின் 'வரலாறு' படத்தை நிராகரித்த பிரபல ஹீரோ!

    By
    |

    சென்னை: அஜித்தின் வரலாறு படத்தை பிரபல ஹீரோ நிராகரித்துள்ளார். இந்தப் படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு டைட்டிலை பரிந்துரைந்துள்ளார்.

    ஒவ்வொரு படத்துக்குப் பின்னும் ஒவ்வொரு கதை இருப்பது கோடம்பாக்க வரலாறு. திட்டமிட்டபடியோ, நினைத்தப்படியோ எந்த படமும் நடந்துவிடாது.

    அப்படி நடந்து முடிந்த படங்களை, விரல் விட்டு எண்ணிவிடலாம். குறைவான எண்ணிக்கையிலான படங்களே அப்படி நடந்திருக்கும்.

    எவ்ளோ வேணாலும் கிளாமர் காட்டுறேன்.. அதுல மட்டும் கைய வச்சிடாதீங்க.. இறங்கி வந்த இளம் நடிகை!எவ்ளோ வேணாலும் கிளாமர் காட்டுறேன்.. அதுல மட்டும் கைய வச்சிடாதீங்க.. இறங்கி வந்த இளம் நடிகை!

    3 வேடங்களில் அஜித்

    3 வேடங்களில் அஜித்

    அதிலும் ஏதாவது சிறு மாற்றங்களாவது நிச்சயம் நடந்திருக்கும். டாப் ஹீரோ படங்களில் கேட்கவே வேண்டாம். அஜித்தின் 'வரலாறு' படத்திலும் அப்படி சில மாற்றங்கள் நடந்திருக்கிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், தல அஜித் மூன்று வேடங்களில் மிரட்டிய படம் வரலாறு. அசின், கனிகா, ரமேஷ் கண்ணா, ராஜேஷ், விஜயன், பொன்னம்பலம் என மெகா நட்சத்திர பட்டாளம் இந்தப் படத்தில்.

    டைட்டில் காட்ஃபாதர்

    டைட்டில் காட்ஃபாதர்

    ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்த இந்தப் படத்தை, நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்திருந்தார். அஜித், மூன்று வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில், காட்ஃபாதர். தமிழ்ப் படங்களுக்கு தமிழில் டைட்டில் வைத்தால் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அரசு அறிவித்ததை அடுத்து, 'வரலாறு' டைட்டிலை மாற்றினர்.

    வசூல் முறியடிப்பு

    வசூல் முறியடிப்பு

    2006ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த இந்தப் படம், 175 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது. தல அஜித்தின் அதற்கு முந்தைய சூப்பர் ஹிட்டான, 'வில்லன்' பட வசூலை முறியடித்தது என்றார்கள். இந்தப் படம் கன்னடத்தில் உபேந்திரா நடிப்பில், காட்ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் ஆகி அங்கும் ஹிட்டானது.

    ரஜினி வைத்த டைட்டில்

    ரஜினி வைத்த டைட்டில்

    இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், ரஜினியின் 'படையப்பா' படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, ஷூட்டிங் இடைவெளியில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். கமலுக்கு என்ன கதை வைத்திருக்கிறீர்கள் என்று ரவிகுமாரிடம் கேட்டார் ரஜினிகாந்த். அப்போது தெனாலி, மற்றும் காட்ஃபாதர் கதையை சொன்னார் ரவிகுமார். இதைக் கேட்ட ரஜினி, இதற்கு மதனா என்று டைட்டில் வைத்தார்.

    வந்து சேர்ந்தார் அஜித்

    வந்து சேர்ந்தார் அஜித்

    கமல்ஹாசன் இந்தக் கதையை நிராகரித்தால் நான் நடிக்கிறேன் என்றாராம் ரஜினி. பிறகு கமல்ஹாசனிடம் சொன்னார், கே.எஸ். ரவிகுமார். அப்போது வேறு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் கமல். அந்த நேரத்தில் இந்த கதையில் நடிக்க விரும்பவில்லை அவருக்கு. பிறகு சூழல்கள் மாற, நடிகர் அஜித் வந்து சேர்ந்தார் இந்தக் கதைக்குள். படம் சூப்பர் ஹிட்டாகி, அஜித்துக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது.

    English summary
    Ajith's award-winning 'Varalaru' was first offered to this top Hero
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X