Ajith's Bike Ride - எங்கே போறீங்க.. எங்கேயோ போறேன் - நேபாளம் பைக் ரைடில் அஜித் கொடுத்த செம பதில்

சென்னை: Ajith's Bike Ride (அஜித்தின் பைக் சுற்றுப்பயணம்) நடிகர் அஜித்குமார் இப்போது நேபாளத்தில் பைக் ரைட் செய்துகொண்டிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணியா என ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

AjithS Bike Ride In Nepal Video Gone VIral On Socila Media

விக்கி அவுட்: ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன கதையின் இரண்டாம் பாதி லைகா நிறுவனத்துக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனையடுத்து இரண்டாம் பாதியை மாற்ற சொல்லியிருக்கிறது லைகா. இருப்பினும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ள விரும்பாத விக்னேஷ் சிவன் ஏகே 62 ப்ராஜெக்ட்டிலிருந்து வெளியே வந்தார். இதனால் அந்த படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு சென்றிருக்கிறது.

கதை விவாதத்தில் தீவிரம்: மகிழ் திருமேனி அஜித்தை இயக்குவது உறுதியாகவிட்டாலும் பட தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதேசமயம் மகிழ் திருமேனிக்கு லைகா நிறுவனம் ஒரு அலுவலகம் அமைத்துக்கொடுத்திருக்கிறது. அங்கு ஏகே 62 படத்துக்கான கதை விவாதத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். கதை இறுதி வடிவம் பெற்றதும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கருதப்படுகிறது

AjithS Bike Ride In Nepal Video Gone VIral On Socila Media

சுற்றுப்பயணம் சென்ற அஜித்: இதற்கிடையே பைக்கில் உலகத்தை சுற்றும் பயணத்தை திட்டமிட்டார் அஜித். அதற்கு பரஸ்பர மரியாதை பயணம் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏகே 62வை முடித்துவிட்டு ஒரே அடியாக உலக சுற்றுப்பயணத்தை தொடங்கலாம் என திட்டமிட்டிருந்தார் அஜித். ஆனால் கதை இறுதி வடிவம் பெறுவதற்கு கால தாமதம் ஆவதால் தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தை சில நாள்களுக்கு முன்பு தொடங்கிவிட்டார்.

நேபாளத்தில் அஜித்: அதன்படி முதல்கட்ட பயணத்தில் திபெத், நேபாளத்தில் பைக் ரைடு செய்துகொண்டிருக்கிறார் அவர். சமீபத்தில்கூட நேபாளத்தில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் சமையற்காரர் உடையை போட்டுக்கொண்டு கிச்சனில் அவர் சமைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. அதேபோல் மற்றொரு ஹோட்டலில் பைக் ரைட் உடையுடன் அவர் சாப்பிடும் வீடியோவும் வெளியானது.

AjithS Bike Ride In Nepal Video Gone VIral On Socila Media

அஜித்தின் புதிய வீடியோ: இந்நிலையில் நேபாளத்தில் அஜித் பைக் ரைட் செய்யும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர் ஒருவர், நேபாள மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த அஜித், மிக அழகான வாழ்க்கையை பெற வேண்டும் என்றார்.

மேலும் அந்த ரசிகர், எங்கே போகிறீர்கள் என கேட்க, எங்கேயோ போகிறேன் எனவும் பதிலளித்தார் அஜித். TS 07 JH 3770 என்ற எண் கொண்ட பைக்கில் அஜித் ரைட் செய்துகொண்டிருக்கிறார். தற்போது அதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X