அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. மீண்டும் திரைக்கு வருகிறது பில்லா.. என்னைக்குன்னு பாருங்க!
சென்னை: நடிகர் அஜித்தின் பில்லா திரைப்படம் மீண்டும் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இரண்டு வருடங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
படத்தின் டைட்டிலுக்கு பிறகு பெரிதாக படம் தொடர்பான எந்த அறிவிப்பும் வந்தது போன்று தெரியவில்லை.

அஜித் வருத்தம்
இதனால் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என அஜித்தின் ரசிகர்கள் பிரதமர், முதல்வர் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரிடமும் கேட்டு வந்தனர். இதனால் வருத்தப்பட்ட அஜித், என்னுடைய ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் முக்கிய தலைவர்களிடம் வலிமை அப்டேட் கேட்பது வருத்தமடைய செய்துள்ளது.

விரைவில் அப்டேட்
சினிமா உங்களுக்கெல்லாம் பொழுது போக்கு, எனக்கு அது தொழில். கண்ணியத்தை கடைப்பிடியுங்கள் வலிமை அப்டேட் விரைவில் வெளியாகும் என்று அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரும் விரைவில் அப்டேட் வெளியாகும் என அறிவித்தார்.

மீண்டும் ரிலீஸ்
இருந்தபோதும் அஜித் ரசிகர்கள் அப்செட்டாகதான் உள்ளார்கள். இந்நிலையில் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தின் பிளாக் பஸ்டர் படமான பில்லா படம் மீண்டும் தியேட்டரில் ரிலீஸ் ஆகவுள்ளது.

தமிழகம் முழுக்க
மார்ச் 12 ஆம் தேதி முதல் தமிழகம் முழுக்க பில்லா படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. தியேட்டரில் அஜித் படம் ரிலீஸ் ஆகி நீண்ட நாட்கள் ஆகும் நிலையில் பில்லா படம் அஜித் ரசிகர்களுக்காகவே திரைக்கு வருகிறது.

விஷ்ணுவர்தன் இயக்கம்
அஜித்தின் பில்லா திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் ரீமேக் ஆகும். அஜித்தின் பில்லா படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நயன்தாரா, பிரபு, நமிதா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.


Click it and Unblock the Notifications











