முதல்வர் இப்ப சொல்றார்... அஜித் அன்னிக்கே சொல்லிட்டாரு...திடீரென வைரலாகும் பில்லா பாடல்

சென்னை : அஜித் தற்போது வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளாக இந்த படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. இதனால் தொடர்ந்து அப்டேட் கேட்டு படத்தை வேற லெவலில் பிரபலமாக்கி விட்டார்கள் அஜித் ரசிகர்கள்.

வலிமை அப்டேட் தான் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருப்பதால் பிரபலங்கள் பலரும் வலிமை படத்தை பற்றி பேச துவங்கினர். வலிமை ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டதும் அதில் ஹெல்மெட் அணிந்து அஜித் பைக் ஓட்டும் ஃபோட்டோவை பயன்படுத்தி, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தினர் போக்குவரத்து போலீசார்.

வைரலாகும் பில்லா பாடல்

வைரலாகும் பில்லா பாடல்

இந்நிலையில் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா படத்தில் வரும் சேவல் கொடி பறக்குதடா பாடல் திடீரென வைரலாகி வருகிறது. அதோடு, அன்றே சொன்ன அஜித் என்ற மீமும் வைரலாகி வருகிறது. அதிலும் இதை வைரலாக்குவது அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல, திமுக.,வினரும் தான்.

அன்றே சொன்ன அஜித்

அன்றே சொன்ன அஜித்

இதற்கு என்ன காரணம் என விசாரித்தால், பில்லா பட பாடல் மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோயில் முன்பு படமாக்கப்பட்டிருக்கும். அப்போது முருகனை நினைத்து அஜித் பாடும் இந்த பாடலில், தமிழன் போற்றும் தமிழ் குலவிளக்கு...வேறு மொழியில் அர்ச்சனை எதற்கு என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். இந்த பாடலை பா.விஜய் எழுதி இருந்தார்.

முதல்வர் திட்டத்திற்கு அஜித் பாடல்

முதல்வர் திட்டத்திற்கு அஜித் பாடல்

சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை கொண்டு வந்ததுடன், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த இந்த திட்டத்தை தற்போது ஸ்டாலின் அமல்படுத்தி உள்ளார். இதனை பாராட்டும் விதமாக அஜித்தின் பில்லா பாடலை வைரலாக்கி வருகின்றனர்.

அன்றே சொன்ன சூர்யா

அன்றே சொன்ன சூர்யா

அதோடு அன்றே சொன்ன அஜித் என்ற மீம்களை உருவாக்கி வருகின்றனர். கொரோனா பரவலின் போதும் இதே போன்று, அன்றே சொன்ன சூர்யா என்ற மீம்மும் வைரலாக்கப்பட்டது. சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் சீனாவில் மர்மமான நோய் பரவுவது போலவும், அதை தமிழகத்தில் இருந்து பல்லவ மன்னனான போதி தர்மர் மருந்து கண்டு பிடித்து குணமாக்கியதாகவும் காட்டப்பட்டிருக்கும்.

Recommended Video

Annai Thamizhil Archanai பற்றி மக்கள் சொல்வது என்ன? | Oneindia Tamil
கொரோனாவை எச்சரித்த ஏழாம் அறிவு

கொரோனாவை எச்சரித்த ஏழாம் அறிவு

அதே போல் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், பிறகு உலக முழுவதும் பரவி கோடிக்கணக்கானவர்களை பலிகொண்டது. இந்த மர்ம நோயை சூர்யா அன்றே கணித்து விட்டார் என அப்போது வைரலாக்கினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X